சாஹ்ரானின் சகோதரர் வீட்டில் தற்கொலை அங்கி கண்டுபிடிப்பு! -

சாஹ்ரானின் சகோதரர் வீட்டில் தற்கொலை அங்கி கண்டுபிடிப்பு!

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து நாடெங்கும் சோதனைகளைக் காவல் துறையினரும் இராணுவத்தினரும் மேற்கொண்டு வருகிறார்கள். இதன் பிரகாரம் நேற்று காத்தான்குடியில் நடத்தப்பட்ட சோதனையொன்றின்போது தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரும் குண்டுதாரியுமான சாஹ்ரான் ஹாஷிமின் சகோதரர் றில்வான் என்பவரது இல்லத்தில் தற்கொலை அங்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து றில்வானின் மனைவியின் தந்தையார் எஸ்.எச்.நசார் மற்றும் அவரது மனைவி ஏ.எல்.எஸ். பஜிறியா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இத் தேடுதல் வேட்டையின்போது இரண்டு கைத் தொலைபேசிகள், பல வங்கி அட்டைகள், வங்கிக் கணக்கு ஏடுகள், றில்வானின் குழந்தைகளின் படங்கள் மற்றும் அடையாள அட்டைகள் என்பன கண்டுபிடிக்கப் பட்டன.

றில்வானும் அவருடைய மனைவியும் சில நாட்களின் முன் கல்முனையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புத் தாக்குதலின் போது நடைபெற்ற குண்டுவெடிப்பில் உயிரிழந்திருந்தனர்.

மூலம்: லங்கா டெய்லி மிரர்

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error
Related:  இளவரசர் கோதபாய ராஜபக்சவுக்கு முடிசூட்டு விழா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)