சாவகர் சேரியில் உலகத்தர சித்திரகூடம்
வலையில் பிடித்தது
ஜெகன் அருளையா
யாழ்ப்பாணத்தில் வதியும் நண்பர் ஜெகன் அருளையாவின் ஆங்கில முகநூற் பதிவொன்றின் தமிழாக்கம் இது. (நன்றி ஜெகன்)
வடக்கிற்கு வரும் உல்லாசப் பயணிகள் வெறுமனே கோட்டை, நல்லூர், ஐஸ் கிரீம் இத்தியாதிகளுடன் திரும்பி விடுவது சங்கடமாக இருக்கிறது. சிரமப்பட்டுத் தேடினால் இன்னும் பல விருந்துகள் புலன்களை அடையக் காத்துக்கொண்டிருக்கின்றன.
சாவகச்சேரியில் ஒரு சித்திரகூடம் இருக்கிறது. இதற்கு நான் முன்னரும் சென்றிருக்கிறேன். ரி.பி. ஹண்ட் ஆர்ட் கலரி (Tp Hunt Artgallery) என்ற பெயரில் இயங்கும் இச்சித்திரகூடத்தின் ஸ்தாபகரை இப்போதுதான் முதல் தடவையாகப் பார்க்கிறேன். யோகமணி என்ற நடுப்பெயரில் அழைக்கப்ப்டும் இவாஞ்செலீன் அலகரட்ணம் அமெரிக்காவில் வாழ்பவர் எனினும் வருடத்தின் கணிசமான காலத்தை இங்குதான் செலவழிக்கிறார். அவருடைய பூட்டனார் அருட்தந்தை தோமஸ் பீற்றர் ஹண்ட் அவர்களுடைய நினைவாக இச்சித்திரகூடத்தை சாவகச்சேரியில் நிறுவியிருக்கிறார். இங்கு சித்திரகூடம் (gallery), வரையகம் (studio), ஓவியப் பள்ளி ( art school) ஆகியன இயங்குகின்றன.
யோகமணி தனது முயற்சியால் கணிசமான ஓவியங்களைச் சேகரித்து காட்சிப்படுத்தி வருகிறார். இந்நிலையம் செயற்படுவதற்கான செலவிலும் பங்கேற்கிறார். நாடெங்குமுள்ள ஓவியர்கள் தமது ஓவியங்களை இக்கூடத்தில் காட்சிப்படுத்தி வருகிறார்கள். திறமையுள்ளவர்களும் திறமையற்றவர்களும், இளையவர்களும், முதியவர்களும் இங்கு வந்து சில் மணித்தியாலங்களை மகிழ்ச்சியுடன் கழிக்கிறார்கள்.
இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள சித்திரங்கள் உலகத்தரம் வாய்ந்தவை. டொலரிலும் பவுண்டிலும் செலவு செய்யும் புலம் பெயர் தமிழருக்கு இவ்வோவியங்கள் நியாயமான விலையுள்ளதாகவே தெரிகிறது. கூடத்தின் பராமரிப்புக்கென அறவிடப்படும் 5% த்தைத் தவிர எஞ்சியது ஓவியர்களுக்கே போகிறது. நான் அதிகம் பேசவில்லை, மீதியை ஓவியங்களே பேசட்டும். இவற்றை நீங்கள் இனிமேல் அங்கு பார்க்க முடியாது. அது என்வீட்டுச் சுவர்களை இப்போது அலங்கரிக்கின்றன.









இச்சித்திரகூடத்தைத் தரிசிக்க விரும்புபவர்கள் நிலையத்துடன் தொடர்புகொண்டு முற்கூட்டியே பதிவுசெய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
இருக்குமிடம் கூகிள் இடம் காட்டி: https://maps.app.goo.gl/k2reXaUCm9pRbmnDA
விலாசம்: No 27, Church Road, Chavakachcheri.
தொ.பே.::+94 74 313 6077 / +94 77 335 0281
மின்னஞ்சல்: huntartgallery18@gmail.com
[நண்பர் ஜெகன் அருளையா தனது இரண்டாவது வயதில் பெற்றோருடன் இங்கிலாந்து சென்று வாழ்ந்தவர். ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் யாழ்ப்பாணம் மீண்டு வந்து தனது பாரம்பரிய நிலத்தில் வாழ்க்கையை மீண்டும் ஆரம்பித்திருக்கிறார். வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி, முதலீடு, வளப்பகிர்வு, கலாச்சார முன்னேற்றம் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டு பணியாற்றி வருகிறார். அவருக்கு தமிழ் மொழிப்பரிச்சயம் குறைவாகையால் அவர் ஆங்கிலத்தில் எழுதும் கட்டுரைகளை அவ்வப்போது தமிழில் மொழிமாற்றம் செய்து தருகிறேன் -சிவதாசன்]
