Uncategorized

சாந்தாங்குளம் கொலைகள் | கொலைக்குற்றத்துக்கான ஆதாரங்கள் உள்ளன – சென்னை உயர்நீதி மன்றம்

சீ.பி.ஐ. விசாரணைகளைப் பாரமெடுக்கிறது

சாந்தாங்குளம் கொலைகள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தலையிட்டதன் காரணமாக விசாரணைகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன. கொல்லப்பட்ட ஜயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரது உடல்கள் மீது நீதிமன்ற உத்தரவின்படி, வீடியோ பதிவுகளோடான மரணபரிசோதனைகள் நிகழ்த்தப்பட்டிருந்தன. அவற்றின் பெறுபேறாக ஆரம்ப விசாரணகளைப் பொலிஸ் சுப்பெறின்ரெண்டென்ட் தொடரவேண்டுமெனவும், பின்னர் சீ.பி.ஐ. அதைப் பாரமெடுக்குமெனவும் நீதிமன்றம் கூறியுள்ளது. ஆதாரங்களை அழித்துவிடாது பார்ப்பதற்காவே இம் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என நீதிமன்றம் மேலும் தெரிவித்துள்ளது.

இன்று (ஜூன் 30), தந்தை, மகனது உடல்களில் மேற்கொள்ளப்பட்ட மரண பரிசோதனைகளின் பெறுபேறுகள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு சமர்ப்பிக்கப்பட்டபோது அவ்வுடல்களில் மிகமோசமான காயங்கள் இருப்பதை அவர்கள் அவதானித்தனர். மறுக்கப்படாதவரை, சமபந்தப்பட்ட பொலிசார் மீது கொலைக்குற்றங்கள் சாட்டப்படுவதற்குப் போதுமான ஆதாரங்கள் (prima facie evidence) உள்ளன என நீதிபதிகள் தீர்மானித்துள்ளனரெனத் தெரிகிறது.



இவ்வழக்கின் விசாரணைகளை சி.பீ.ஐ. பாரமெடுப்பதற்கு முன்னர், ஆதாரங்கள் அழிக்கப்படாமலிருப்பதற்காக, திருநெல்வேலி குற்ற விசாரணைப் பிரிவின் இன்ஸ்பெக்டர் ஜெனெரல் இவ் விசாரணைகளைத் தொடரவேண்டுமென்றும் உயர்நீதிமன்றம் கேட்டிருக்கிறது. விசாரணைகள் தாமதிக்கப்பட்டால் ஆதாரங்கள் அழிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டென நீதிமன்றம் கருத்து தெரிவித்ததுடன், வெள்ளிக்கிழமை 12:00 மதியத்துக்கு முதல் தமிழ்நாடு அரசு இது பற்றிய அறிக்கையைச் சமர்ப்பிக்கவேண்டுமெனவும் அது உத்தரவிட்டுள்ளது.

நேற்று (திங்கள்), தமிழ்நாடு அரசு சாந்தாங்குளம் கொலை விசாரணைகளை சி.பீ.ஐ. இற்கு மாற்றியிருந்தது. நீதி மன்றம் கேட்டிருந்தும், ADSP டி. குமாரையும், DSP பிரதாபனையும் மாநில பொலிஸ் திணைக்களம் இன்னும் மாற்றம் செய்யவில்லை. வெள்ளியன்று குமார், பிரதாபன் மற்றும் இச் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைப் பிரிவு நீதிபதிகள் முன்னிலையில் ஆஜர்படுத்தபட்டிருந்தனர்.

சாந்தாங்குளம் பொலிசாரின் பொய்களை உடைக்கும் CCTV காட்சிகள்

(நன்றி: தி நியூஸ் மினிட்)