News & AnalysisSri Lanka

சாகச்சேரி இந்து மாணவன் அகில இலங்கை ரீதியில் கணிதப் பிரிவில் முதலிடம்

இலங்கையில், க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் 2020 ஆண்டுக்கான பெறுபேறுகள் வெளிவந்துவிட்டன. இதில் சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் தனராஜ் சுந்தர்பவன், கணிதப் பிரிவில், அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

சிறு வயதிலிருந்தே கல்வியில் சாதனைகளைப் புரிந்து வருபவர் தனராஜ்.

ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் 182 புள்ளிகளைப் பெற்றிருந்த தனராக் பின்னர் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் 9A அதி விசேட சித்தியையும் பெற்றுஷ் சாதனை படைத்திருந்தார்.

கற்கைநெறிகளுக்குப் புறம்பான துறைகள் பலவற்றிலும் தனராஜ் அதே அளவு திறமைகளையும் காட்டி வருபவர். 2014 இல் இந்தோனேசியாவில் நடைபெற்ற கணித ஒலிம்பியாட் போட்டியில் தனரராஜ் பதக்கமொன்றைப் பெற்றிருந்தார். விளையாட்டுத் துறையிலும் எண்ணற்ற பதக்கங்களை வென்று குவித்துள்ளார் தனராஜ்.