Sri Lanka

சமூக வலைத் தளங்களில் விடுதலைப் புலிகளைப் பெருமைப்படுத்தியமைக்காக நான்கு பேர் கைது!


முகநூலில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை புகழ்ந்தேற்றியமைக்காக நான்கு பேர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனப் பதில் பொலிஸ் மாஅதிபர் அஜித் றோஹண தெரிவித்துள்ளார்.

இலங்கையில் விடுதலைப் புலிகளை நினைவுகூரும் அல்லது பெருமைப்படுத்தும் எந்தவொரு நிகழ்வையும் நடத்தக்கூடாது என நீதிமன்றம் உததரவு பிறப்பித்திருந்தது. இவ்வுத்தரவு பற்றி வடக்கு கிழக்கு வாழ் மக்களுக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது என றோஹண மேலும் தெரிவித்தார்.

ஏறாவூர் பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டுள்ள இந்த நால்வர் மீதும் விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயல்களைப் பெருமைப்படுத்தியமைக்காக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் தெரிவித்தார்.