Spread the love

சிவதாசன்

வாஷிங்டன் வியாழன் மே 28, 2020

இன்று அமெரிக்க ஜனாதிபதி ட்றம்ப் சமூக வலைத்தளங்கள் மீது ஒரு நிறைவேற்றுக் கட்டளையை (executive order) அறிவித்துள்ளார். இதற்குக் காரணம் ட்றம்பிற்கும் ருவிட்டர் வலைத் தளத்துக்குமிடையில் ஏற்பட்ட தகராறு எனப் பேசப்படுகிறது. இதன் காரணமாக வலைத்தளங்களில் போர் தொடுத்துள்ள ட்றம்ப், இந்த நிறைவேற்றுக் கட்டளை மூலம் பழி தீர்க்கின்றார் என்கிறார்கள்.

பின்னணி

ட்றம்ப் தனது மனதில் தோன்றுபவைகளை அப்படியே, உடனுக்குடன் ருவீட் செய்யும் வழக்கமுள்ளவர். இதனால் பல தடவைகள் உண்மைக்குப் புறம்பான தகவல்களையும், அரசாங்கத்துக்கு சங்கடம் தரும் விடயங்களையும் ருவீட் செய்து இக்கட்டில் மாட்டிக்கொண்டிருக்கிறார். இருந்தும் எவராலும் அவரது இப் பழக்கத்தை மாற்றிக்கொள்ள முடியவில்லை.

இதனால், ருவிட்டர் போன்ற சில நிறுவனங்கள் தமது தளங்களில் பதியப்படும் செய்திகளின் உண்மைத்தன்மையைச் சரிபார்த்து அவற்றில் தவறு இருக்கிறது எனக் காணப்பட்டால் அத் தகவல்களை அகற்றி வந்தார்கள்.

சமீபத்தில் இப்படி அகற்றப்பட்ட தகவல்களில் ட்றம்ப் ருவீட் செய்தவையும் அகப்பட்டுவிட்டன. இதனால் சினம்கொண்டுவிட்டார் ட்றம்ப். விளைவு இந்த நிறைவேற்றுக் கட்டளை.சமூக வலைத்தளங்களின் சமூகப் பொறுப்பு

நவீந உலகில் சமூக வலைத் தளங்களின் தாக்கம் மிக மிகப் பெரியது. ஒரு காலத்தில் அதிகார வர்க்கங்களின் கையிலிருந்த பிரதான ஊடகங்களே மக்களின் உனர்வுகளையும், செயற்பாடுகளையும் இயக்கி வந்தன. இப்போது சமூக வலைத்தளங்கள் அப் பொறுப்பைத் தாம் எடுத்துக்கொண்டு விட்டன. அரபு வசந்தம் முதல் அமெரிக்க ஜனாதிபதித் தேர்வு வரை அவற்றின் வெளிப்பாடுகள் என்னும் அளவுக்கு நிலைமை முற்றிலும் புரட்டிப் போடப்பட்டுவிட்டது.

இதன் எதிர்வினையாக குறிப்பிட்ட சில சமூக வலைத் தளங்களின் கைகளில் அதிகாரங்கள் குவிந்துவிட்டன எனவும் இவற்றில் ருவிட்டர், ஃபேஸ்புக், வட்ஸப் போன்றவை மீது கலாச்சார, மனிதஉரிமைக் காவலர்கள் குற்றம்சாடி வந்தனர். அதி ஓரளவு உண்மையும் இருந்தது.

சட்டச் சிக்கல்

சமூக வலைத் தளங்கள் இயங்கும் முறை அலாதியானது. அதை விளக்க ஒரு உதாரணம்.

நீங்கள் ஒரு கடையொன்றை வைத்துள்ளீர்கள். அதன் முன்னால் இருந்த ஒரு வெளியைச் சில ரூபாய்களுக்கு ஒரு புகைப்படக் கலைஞர் தற்காலிகமாக வாடகைக்கு எடுத்து தனது கருவியுடனும் சில பதாகைகளுடனும் வியாபாரத்தை தொடங்குகிறார். உங்களிடம் வரும் வாடிக்கையாளர்களுடன் அவர் ‘கதையைக் கொடுத்து’ அவர்களின் படங்களை எடுத்து அவர்களுக்கு சிறிய தொகைக்கோ அல்லது இலவசமாகவோ கொடுக்கிறார். இலவசமாகக் கொடுக்கும்போது அவர் ஒரு பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக் கொள்கிறார். அழகான உங்கள் படத்தை அவர் தனது தேவைகளுக்குப் பாவிப்பதில் உங்களுக்கு ஆட்சேபனை இல்லை. சில நாட்களில் உங்கள் படம் மாற்றியமைக்கப்பட்டு ஒரு விளம்பரத்திலோ அல்லது பாலியல் சஞ்சிகையிலோ வருகிறது. நீங்கள் அக்கடையைத் தேடிப்போகிறீர்கள். புகைப்படக்காரர் பெட்டியைக் கட்டிப் பலநாட்கள் ஆகிவிட்டது. கடைக்காரர் கையை விரித்துவிடுகிறார்.

Related:  அமெரிக்காவில் பணி புரிவதற்கான H-1B, H-4 விசாக்களுக்கு தற்காலிக தடை - அமெரிக்க ஜனாதிபதி பிரகடனம்!

இந்தக் கடைதான் சமூக வலைத் தளம். அவர் கொடுத்த ‘இடம் தான்’ platform. புகைப்படக்காரர் உங்கள் படத்துடன் ‘அழகாகப் போட்டுத் தந்த பிரேம் அவரது app (application). இலவசம் என்ற பேயரில் உங்கள் படத்தைப் பாவிப்பதற்கான உரிமத்தை அவருக்கு கையெழுத்துப் போட்டுவிட்டீர்கள். சட்டப்படி நீங்கள் எதுவுமே செய்ய முடியாது. கடைச் சொந்தக்காரரையும் சட்டம் எதுவும் செய்ய முடியாது. மாட்டியது நீங்கள்.

ருவிட்டர், ஃபேஸ்புக் போன்ற வலைத்தளங்களை மேடைகளாகப் பாவித்து பல இலவச app கள் மூலம் செய்வது வெறும் தகவல் சேகரிப்புத் (data mining) தான். இத அவர்கள் மூந்றம் தரப்புக்கு விற்றுவிடுகிறார்கள். சேகரிக்கப்பட்ட தகவல்களை இந்த ‘அப்’ நிறுவனங்கள் பெரிய வணிக நிறுவனங்களுக்கு விற்றுப் பணம் சம்பாதிக்கின்றனர். இந்த ‘அப்’ களுக்கு மேடை கொடுப்பதற்கு வலைத்தளங்கள் பெரும் பணத்தை அறவிடுகின்றன. உங்கள் பலவீனங்களைப் பலரும் காசாக்குகிறார்கள்.அரசியல், வணிக உபயோகம்

ட்றம்ப் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டபோது ஜனநாயகக் கட்சி புகாரொன்றைச் செய்திருந்தது. அவரது வெற்றிக்குப் பின்னால் சமூகவலைத்தளங்களும், சில சந்தைப்படுத்தும் நிறுவனங்களும், வெளிநாட்டு அரசுகளும் பங்குகொண்டிருந்தன என அக்கட்சி குற்றச்சாட்டுகளைச் சுமத்தியிருந்தது. Cambridge Analytica என்ற பிரித்தானிய நிறுவனம் சமூக வலைத்தளங்களிலின் மூலம் அமெரிக்க மக்களைக் குழப்பி ட்றம்புக்குச் சாதகமாக வெற்றியைத் திருப்பிவிட்டது என்பது அக்கட்சியின் குற்றச்சாட்டுகளில் ஒன்று. கேம்பிறிட்ஜ் அனாலிற்றிக்கா தாம் உருவாக்கிய ‘அப்’ களைப் பாவித்து சமூகவலைத்தளங்களின் (platforms) எவரெவரெல்லாம் வலதுசாரி உணர்வுகளைக் கொண்டிருக்கிறார்கள் எனபதைச் சேகரித்து (data mining) அவர்களைக் குறிவைத்து ட்றம்பின் கொள்கைகளைப் பரப்பி தேர்தலில் அவரை வெற்றிபெற வைத்திருந்தார்கள். இதன் சூத்திரதாரிதான் ஸ்டீவ் பனொன்.

இக் காரணக்களினால் சமூக வலைத்தளங்களின் மீது உலகெங்கும் அரசாங்கங்களும், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் அழுத்தங்களைக் கொடுத்தன. அதன்படி அத் தளங்களில் வெளியாகும் தகவல்களின் உண்மை, நேர்மைத்தன்மைகளைச் சரிபார்க்கும் பொறுப்புக்களையும் அவர்களே எடுக்கவேண்டும் என்பத் இவ்வழுத்தங்களில் ஒன்று.

இதற்கு உடன்பட்ட சமூகவலைத் தளங்கள் பல்லாயிரக்கணக்கானவர்களை வேலைக்கு அமர்த்தி, பாவனையாளர் தரவேற்றும் ஒவ்வொரு விடயத்தையும் (குறிப்பாக வன்முறை, பாலியல் காணொளிகள்) சரிபார்த்த பின்னரே அத் தகவல்கள் வெளியிடப்பட்டு வந்தன. (இதனால் இப் பணியாளர்கள் பலர் இத் தகவகளினால் மன உளைச்சலுக்கு உள்ளாகிப் பலர் தற்கொலை செய்தது வேறு விடயம்). தற்போது பல சமூக வலைத்தளங்கள் செயற்கை விவேகத் தொழில்நுட்பத்தைப் (artificial intelligence (AI)) இச்செயற்பாட்டுக்குக்குப் பாவிக்கிறார்கள்.

இந்த வாரம், வலைத்தளங்களின் கெட்ட காலமோ என்னவோ ட்றம்பின் ருவீட் ஒன்று இந்த நடைமுறைக்குள் மாட்டுப்பட்டதால் அவர் கடுப்பாகிவிட்டார். அதன் பெறுபேறுதான் இந்த நிறைவேற்றுக் கட்டளை. அதாவது ‘நீங்கள் எனது தகவல்களைச் சரிபார்த்து அவற்றை அகற்றுவதற்கு உங்களுக்கு அதிகாரமில்லை. நீங்கள் வேண்டுமானால் வழக்கறிஞர்களைப் பாவித்து இத் தகவல்கள் பிழையாயின் வழக்காடி வென்றுபாருங்கள்’ என்பதுவே ட்றம்பின் வாதம். ஏற்கெனவே சமூகவலைத் தளங்களுக்கு இப்படியான வழக்குகளில் இருந்து பாதுகாப்பை 230 வது பிரிவு வழங்குகிறது.

Related:  கருணா விடுதலைப்புலிகளின் தலைவரின் இருப்பிடத்தைக்கூடக் காட்டித்தரவில்லை - சரத் பொன்சேகா


இதற்குக் காரணம், ட்றம்பும், அவரது சகபாடிகளும் தமது எதிரிகளைத் தாக்கியழிப்பதற்கு வெற்றிகரமாகப் பாவித்துவந்த ஆயுதம் சமூக வலைத்தளம். அவற்றில் ஏற்றப்படும் தகவல்களை அகற்றுவதன் மூலம் ட்றம்ப் போன்றவர்களின் அடுத்தகட்டத்துக்கான நகர்வு மிக மோசமாகப் பாதிக்கப்படும்.

இந்த நிறைவேற்றுக் கட்டளை மூலம் மத்திய தகவற் பரிமாற்று ஆணையம் மற்றும் மத்திய வர்த்தக ஆணையம் ஆகியனவற்றுக்கு, இவ்வலைத்தளங்கள் மீது அதிக கட்டுப்பாடுகளை விதிக்க அனுமதி வழங்கப்படுகிறது.

சபையில் விவாதிக்கப்பட்டு சட்டமாக்கப்படாமல் எதுவும் உடனடியாக நடைமுறைக்கு வந்துவிடமுடியாது. ஆனாலும் சமூகவலைத் தளங்கள் தமக்குள் சில நெளிவுகளைச் செய்து எல்லாம் வல்ல ஜனாதிபதியாரைச் சாந்தப்படுத்தச் சாத்தியங்களுண்டு.

நாங்கள் தொடர்ந்தும் பிழைகளைக் கண்டிபிடித்துத் தகவல்களை அகற்றியே தீருவோம் என ருவிட்டர் முதன்மை நிர்வாகி ஜாக் டோசி தெரிவித்திருக்கிறார்.

ஒன்றும் காரணமில்லாமல் நடப்பதில்லை.

Print Friendly, PDF & Email