NewsWorld History

சமஸ்கிருதமே உலகத்தின் ஆதி மொழி – இந்திய அமைச்சர்

கரக்பூர் ஆகஸ்ட் 28,2109

புதிதாக உருவாகும் பொறியியலாளர்கள் உண்மையை அறிவதற்கு, ராமா சேது, கீதை, ஆயுர்வேதம், சமஸ்கிருதம் போன்றவற்றைப் புதிய கண்ணோட்டத்துடன் ஆராய வேண்டும் என கரக்பூரிலுள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் (Indian Institute of Technology (IIT) 65 வது வருடாந்த பட்டமளிப்பு விழாவில் பேசும்போது இந்திய மனித வள அமைச்சர் ரமேஷ் பொக்றியல் நிஷன்க் கூறினார். நாட்டின் விஞ்ஞான, தொழில்நுட்ப முன்னேற்றம் ஆன்மீகத்துடன் மிக இறுக்கமான தொடர்புடையது என்றார் அவர்.

உலகம் யோகாவையும், வேதங்களையும், ஆயுர்வேதத்தையும் கணக்கெடுக்க ஆரம்பித்திருக்கிறது. சமஸ்கிருதமே உலகத்தின் ஆதி மொழி. அதற்கு முன்னர் எந்த மொழியும் இருந்ததாக இதுவரை எவராலும் நிரூபிக்கப்படவில்லை

ரமேஷ் பொக்றியல் நிஷன்க்

“உலகம் யோகாவையும், வேதங்களையும், ஆயுர்வேதத்தையும் கணக்கெடுக்க ஆரம்பித்திருக்கிறது. சமஸ்கிருதமே உலகத்தின் ஆதி மொழி. அதற்கு முன்னர் எந்த மொழியும் இருந்ததாக இதுவரை எவராலும் நிரூபிக்கப்படவில்லை. இதைச் சொல்வதற்காக எங்களை மற்றவர்கள் பரிகாசிக்கலாம். எனவே, புதிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டு நிரூபியுங்கள் என்று வெளியேறும் மாணவர்களை நான் கேட்டுக்கொள்கிறேன்” என அவர் மேலும் தெரிவித்தார்.

“நாம் பின்னோக்கிப் பார்க்கும்போது, எமது பண்டய ‘பொறியியலாளர்கள்’ எப்படி ராமர் பாலத்தைக் கட்டினார்கள். இனி வரப்போகும் பொறியியலாளர்கள் அதைப் பற்றி ஆராய வேண்டும்.புதிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அதன் பின்னால் மறைந்திருக்கும் உண்மையை வெளிக்கொணர வேண்டும்” என்றார் அவர். ராமர் பாலம் மனிதர்களால் கட்டப்பட்டது என்பதற்கு எந்தவித வரலாற்று அல்லது விஞ்ஞான பூர்வமான ஆதாரமுமில்லை என இந்திய தொல்பொருள் ஆரய்ச்சி நிலையம் கூறுவதை அவர் கேள்விக்குள்ளாக்கினார்.

” ராமர் பாலம் போன்ற பாரம்பரிய அற்புதங்களை யுகங்களுக்கு முன்னரேயே எம்முன்னோர்கள் நிர்மாணித்திருந்தார்கள் என்பதை உலகுக்குத் தெரியப்படுத்த வேண்டும்” என அவர் கேட்டுக்கொண்டார்.