IndiaTechnology & Science

சந்திரயான்-2 | தரை வாகனம் (rover) பாதுகாப்பாக இருக்கிறது – சண்முகா சுப்ரமணியன்


சண்முகா சுப்ரமணியன்

ஆகஸ்ட் 2, 2020: கடந்த செப்டம்பர் மாதம் 7 ம் திகதி சந்திரயான்-2 விண்கலத்தினால் சந்திரனில் தரையிறக்கப்பட்ட விக்ரம் எதிர்பார்த்தவாறு மெதுவாக இறங்காமையால் அது சீர்குலைந்திருக்கலாமெனவும், அதில் அனுப்பபட்ட தரை வாகனமான (rover) செயலிழந்து விட்டிருக்கலாமெனவும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் கருதி வந்தனர். ஆனால் அத் தரை வாகனமான பிரக்யான் சந்திரனின் தரையில் நகர்ந்து சென்றதற்கான சில்லின் தடயங்களைப் பார்க்கக்கூடியதாக உள்ளது என சென்னையைச் சேர்ந்த தொழில்நுட்பவியலாளர் சண்முகா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

தரையிறங்கிச் சில மாதங்களின் பின், நாசாவினால் பெறப்பட்ட சந்திரனின் படங்களை ஆராய்ந்து, விக்ரம் தரையிறங்கிய இடத்தையும், செயலிழந்து கிடக்கும் அதன் உருவத்தையும் கண்டுபிடித்து சண்முகா முன்னர் ஆச்சரியப்படுத்தியிருந்தார்.

Chandrayaan-2 rover may still be intact on moons surface Chennai techie findsTWITTER/RAMANEANNEWS SPACE SUNDAY, AUGUST 02, 2020 – 12:51Sanyukta DharmadhikariFollow @dramadhikari

தரையிறங்கிய விக்ரம் சேய் கலத்தில் தரை வாகனமான பிரக்யான் பிணைக்கப்பட்டிருந்தது எனவும், மிகவும் கடுமையான நிலையில் தரையிறங்கிய விக்ரம் பூமியுடனான தொடர்புகளைத் துண்டித்துக்கொண்டது எனவும் இஸ்றோ (இந்திய விண்ணாராய்ச்சி நிலையம்) விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தார்கள்.

நாசா சந்திரனை எடுத்த புதிய துல்லியமான படங்களைப் பெற்று சண்முகா சுப்ரமணியன், அவற்றைப் பெரிதாக்கி ஆராய்ந்தபோது தற்போது பிரக்யான் இருக்குமிடம், விக்ரம் தரையிறங்கிய இடத்திலிருந்து சற்றுத் தூரத்தில் இருக்கிறதென்றும், அங்கு அது நகர்ந்து சென்றதற்கான சில்லுத் தடயங்களைக் காணமுடிகிறதென்றும் தெரிவித்திருக்கிறார்.

“பழைய சந்திரயான் படங்களையும் புதிய படங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தபோது அவற்றில் பல வேறுபாடுகள் காணப்பட்டன. இதனால் நாசாவின் மென்பொருளைப் பாவித்து இப் படங்களைப் பெருப்பித்துப் பார்த்தபோது தரை வாகனத்தின் சில்லுத் தடயங்களை அவதானிக்க முடிந்தது” என சண்முகா ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

பிரக்யான், பூமியிலிருந்து தொடர்ச்சியாகக் கட்டளைகளைப் பெற்றுக்கொண்டிருக்கிறதென்றும், அதனால் தான் அது விக்ரத்திலிருந்து சில மீட்டர்கள் தூரம் நகர்ந்திருக்கிறதென்றும் சண்முகா கருதுகிறார்.



விக்ரம் விழுந்து நொருங்கியது முதல் பூமியிலிருந்து கட்டளைகளை அது பெற்று பிரக்யானுக்கு அனுப்பிக்கொண்டிருந்திருக்கலாம் ஆனால் விக்ரத்தினால் பூமியோடு தொடர்புகொள்ள முடியாதிருந்திருக்கலாம் என சண்முகாநம்புவதாகம் இஸ்றோ தான் இவற்றை உறுதிப்படுத்த வேண்டுமெனவும் அவர் தனது ருவீட்கள் மூலம் தெரிவித்திருக்கிறார்.

சந்திரயான் -2 இன் தாய்க்கலம் இப்போதும் சந்திரனைச் சுற்றி வந்துகொண்டிருப்பதுடன் வேறு பல பரிசோதனைகளையும் செய்துகொண்டிருக்கிறது என்கிறார்கள் இஸ்ரோ விஞ்ஞானிகள்.