சந்திரன் தரையில் நொருங்கிய விக்ரம் | நாசா செய்மதி படத்தில் கண்டுபிடித்த தமிழர்! -

சந்திரன் தரையில் நொருங்கிய விக்ரம் | நாசா செய்மதி படத்தில் கண்டுபிடித்த தமிழர்!

டிசமபர் 2, 2019

சந்திரனைச் சுற்றிக்கொண்டிருக்கும் செய்மதி, கடந்த செப்டம்பரில் சந்திரத் தரையில் விழுந்து நொருங்கிய இந்தியாவின் தரைக்கலமான விக்ரத்தைக் கண்டுபிடித்திருக்கிறது.

சந்திரனின் தென் துருவப்பகுதியில் விழுந்து நொருங்கிக் கிடக்கும் விக்ரம் [படம்: AFP]

Lunar Reconnaissance Orbiter (LRO) எனப்படும் நாசாவின் செய்மதி, சந்திரத் தரையில் விழுந்து நொருங்கிக் கிடக்கும் விக்ரத்தின் படங்களைப் பூமிக்கு அனுப்பியிருக்கிறது. விக்ரத்தின் சிதைந்த பாகங்கள் பல கிலோமீட்டர்கள் தூரத்துக்குப் பரவிக்கிடப்பதை அப்படங்கள் காட்டுகின்றன.

விக்ரம் தரையிறக்கப்பட்ட உத்தேச தரைப்பகுதியின் படங்களை, நாசா செப்டம்பர் 26 அன்று பொதுமக்கள் பார்வைக்கு விட்டு விக்ரத்தின் தடயங்கள் உள்ளனவா என ஆராயும்படி கேட்டிருந்தது.

இக் கோரிக்கைக்கிணங்க சண்முகா சுப்பிரமணியன் என்ற சென்னையைச் சேர்ந்த பொறியியலாளர், நாசாவுடன் தொடர்புகொண்டு விக்ரத்தின் தடயங்களை அடையாளம் காட்டியுள்ளார்.

விக்ரம் என்ற சேய்க்கலத்தைத் தரையிலிறக்கி ஆய்வுகளை மேற்கொள்வதற்காக சந்திராயன் 2 என்ற சந்திர வாகனத்தை இந்தியா கடந்த ஜூலை மாதம் சந்திரனுக்கு அனுப்பியிருந்தது. சந்திரனுக்கு விண்கலங்களை அனுப்பிய நாடுகளில், அமெரிக்கா, ரஸ்யா, சீனாவுக்கு அடுத்தபடியாக, நான்காவது நாடாக இந்தியா வருகிறது எனினும் சந்திரனின் தென் துருவத்துக்கு விண் கலத்தை அனுப்பிய முதலாவது நாடு இந்தியா தான்.

தாய்க்கலமான சந்திரயான் 2 இப்போதும் சந்திரனின் ஒழுக்கு வட்டத்தில் சுற்றிக்கொண்டிருக்கிறது. சேய்க்கலமான விக்ரம் தரையிறங்கும்போது, தரையிலிருந்து 2.1 கி.மீ தூரமிருக்கையில் பூமியுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டது.

சில நாட்களின் பின் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் விக்ரத்தைக் கண்டுபிடித்திருந்ததாயினும் தொடர்புகளை மீளவும் ஏற்படுத்த முடியாமற்போனது.

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error
Related:  உலகின் முதல் மின்சார விமானம் | கனடாவில் பரீட்சார்த்த பறப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)