News & AnalysisSri Lanka

சட்டமா அதிபர் திணைக்கள புதிய நூலகப் பெயர்ப்பலகையில் தமிழுக்குப் பதிலாக சீன மொழி

வெள்ளியன்று (மே 21) திறந்துவைக்கப்பட்ட, சட்டமா அதிபர் திணைக்களத்தின் புதிய இலத்திரனியல் நூலகத்தில் தமிழ் புறக்கணிக்கப்பட்டு அதற்குப் பதிலாக சீன மொழி புகுத்தப்பட்டுள்ளது.

தனியார் ஊடகமான ‘நியூஸ் ஃபெர்ஸ்ட்’ இவ்விடயம் பற்றி நீதி அமைச்சர் அலி சப்ரியிடம் கேள்வி எழுப்பிய போது அவர் அவ்விடயம் பற்றி நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்திருந்தார் எனவும், உரிய அதிகாரிகளுக்கு அவர் இவ்விடயத்தைத் தெரிவித்ததையடுத்து அப் பெயர்ப்பலகை இப்போது நீக்கப்பட்டுள்ளது எனவும் ‘நியூஸ் ஃபெர்ஸ்ட்’ தெரிவித்துள்ளது.

விரைவில், தமிழ் மொழியை உள்ளடக்கிய புதிய பெயர்ப்பலகை அங்கு ந்ரிமாணிக்கப்படுமென அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளதாக அறியப்படுகிறது.

சீன அரசாங்கம் மற்றும் மக்களின் உதவியில் இந் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.

இவ் விடயம் பற்றி தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் அக்கறைப்பட்டதாக ஊடகங்கள் எதிலும் செய்தி வந்ததாகத் தெரியவில்லை.