Sri Lanka

சஜித் மீது நிதி மோசடி விசாரணைகள் ஆரம்பம்!

டிசம்பர் 15, 2019

முன்னாள் அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவருமான சஜித் பிரேமதாச மீது நிதி மோசடிக் குற்றங்கள் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சஜித் பிரேமதாச வீடமைப்பு நிர்மாண அமைச்சராகவிருந்தபோது அமைச்சின் பணத்தை முறையற்ற வகையில் காயாண்டுள்ளதாகக் கிடைத்த முறைப்பாட்டையடுத்து அவர் மீது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சஜித் பிரேமதாச அமைச்சராகவிருந்தபோது ஊழியர்களின் சம்பளத்துக்கென 480 மில்லியன் ரூபாய்கள் செலவைழிக்கப்பட்டதெனக் கூறப்பட்ட போதும் அதில் 350 மில்லியன் ரூபாய்கள் மட்டுமே வீடுகள் நிர்மாணிப்பதற்காகச் செலவிடப்பட்டிருக்கிறதென வீடமைப்பு ராஜாங்க அமைச்சர் இண்டிகா அனுருத்த மற்றும் பா.உ. நாமல் ராஜபக்ச ஆகியோர் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது தெரிவித்துள்ளனர்.

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் மட்டும், 337 உடகம்மன வீட்டுத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டிருந்த போதும் அவற்றில் 84 மட்டுமே முடிக்கப்பட்டுக் கையளிக்கப்பட்டுள்ளன என அவர்கள் தெரிவித்தார்கள்.

2015 இல் 15 வீட்டுத் திட்டங்களும், 2016 இல் 77 தொடங்கப்பட்டு 49 மட்டுமே முடிக்கப்பட்டும், 2017 இல் 50 தொடஙகப்பட்டு 8 மட்டுமே முடிக்கப்பட்டும், 2018 இல் 104 தொடங்கப்பட்டு 15 மட்ட்டுமே முடிக்கப்பட்டுமுள்ளன.

15 housing villages had been distributed to people in 2015. In 2016, 77 commenced, with only 49 of them finished. In 2017, 50 commenced, finishing only 8. In 2018, 104 commenced, finishing only 15. முந்தைய திட்டங்களை முடிக்காமலேயே ஒவ்வொரு வருடமும் புதிய வீட்டுத்திட்டங்களை ஆரம்பித்துப் பணத்தைப் பெறுவது வழக்கமாகவிருந்தது என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

இத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டபோது பல முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாகக் கண்டறியப்கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து சஜித் பிரேமதாச மீது விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.