சஜித் பிரேமதாச ஐ.தே .கட் சியின் ஜனாதிபதி வேட்பாளராகிறார்! -

சஜித் பிரேமதாச ஐ.தே .கட் சியின் ஜனாதிபதி வேட்பாளராகிறார்!

Spread the love
நிபந்தனைகளின் அடிப்படையில் ரணில் ஆதரவு

செப்டம்பர் 24, 2019

ஐ.தே.கட்சியின் மூத்த தலைவர்களின் சந்திப்பைத் தொடர்ந்து சஜித் பிரேமதாசாவையே ஜனாதிபதி தேர்தலின் வேட்பாளராக நிறுத்துவதெனக் கட்சி முடிவெடுத்திருப்பதாக அறியப்படுகிறது

ரணில் விக்கிரமசிங்கவையும் சஜித் பிரேமதாசாவையும் ஆதரிக்கும் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் செவ்வாயன்று (24) சந்தித்து இந்த முடிவை எட்டியுள்ளரெனவும், சில நிபந்தனைகளின் அடிப்படையில் ரணில் விக்கிரமசிங்கவும் இதற்கு ஆதரவளித்திருப்பதாகவும் தெரியவருகிறது.

ரணில் விக்கிரமசிங்கவின் நான்கு நிபந்தனைகளாவன: (1). ரணில் தொடர்ந்து பிரதமராக இருக்க வேண்டும் (2). ரணிலே கட்சித் தலைவராகவும் தொடர்ந்து இருக்க வேண்டும் (3). நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு உறுதியளிக்க வேண்டும் (4). பாராளுமன்ற செயற்குழு தீர்மானித்ததற்கமைய, தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்குத் தீர்வாக அதிகார பகிர்வு நடைமுறைப்படுத்தப்படவேண்டும்.

அதே வேளை , திஸ்ஸ அத்தநாயக்கா உட்பட, ஐ.தே .கட்சியை விட்டுப் பிரிந்து போன அனைவரையம் திரும்பி வந்து நாட்டைக் கட்டியெழுப்ப உதவி செய்யுமாறு சஜித் பிரேமதாச அறைகூவல் விடுத்துள்ளார்.

அதே போன்று கொள்கை வேறுபாடுகளால் கட்சியிலிருந்து விலகி நிற்கும், கட்சியின் வளர்ச்சிக்காகப் பல தியாகங்களை செய்த பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளுராட்சி உறுப்பினர்கள் அனைவரையும் மீண்டும் வந்து கட்சிக்காக உழைக்கும்படி அவர் கேட்டுக்கொண்டார்.

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error
Related:  நுண் கடன் கொடுமையால் குடும்பம் தற்கொலை முயற்சி, தாயார் மரணம் - மட்டுவிலில் சம்பவம்