Spread the love

நவம்பர் 29, 2019

இலங்கைப் பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாசவைத் தெரிந்தெடுத்துள்ளதாக ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களில் ஒருவரான மனோ கணேசன் டுவீட் செய்தி மூலம் தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் கரு ஜயசூரியாவின் அழைப்பின் பேரில் கூட்டப்பட்ட கூட்டமொன்றில் இம் முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது எனத் தெரியவருகிறது. பிரச்சினையைச் சுமூகமாகத் தீர்ப்பதற்கு சஜித் பிரேமதாசவுக்கும் ரணில் விக்கிரமசிங்கவிற்குமிடையே சந்திப்பொன்றை ஏற்படுத்துவதற்கு கடந்த சில நாட்களாக கரு ஜயசூரியா முயற்சிகளை எடுத்துவந்தாரெனினும் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்திக்க சஜித் பிரேமதாச மறுத்து வந்தார்.

இன்றய நடந்த சந்திப்பின்போது பங்காளிக் கட்சி உறுப்பினர்களுடன், சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க மற்றும் கரு ஜயசூரிய பிரசன்னமாயிருந்தனர் எனத் தெரிகிறது.

சஜித் எதிர்க்கட்சித் தலைவர்? 1
Print Friendly, PDF & Email
Related:  வடமாகாணத்தில் ஆங்கிலக் கல்வி ஊக்குவிப்பு - அனைத்துலக மருத்துவ நல அமைப்பின் (IMHO USA) மற்றுமொரு செயற்திட்டம்