சக்தி தாசன்: மஹாகவி பாரதியார் பற்றிய விவரணச் சித்திரம்
சக்திதாசன் என்பது பாரதியார் தமக்குச் சூட்டிக்கொண்ட புனைபெயர்களுள் ஒன்று. அந்தப் பெயரைத் தாங்கி சமீபத்தில் வந்திருக்கும் 1-மணி நேர ஆவணப்படம் இது. சுதந்திரப் போராட்ட அரசியலின் ஊடாக புத்தெழுச்சி பெறும் பாரதி என்ற ரத்தமும் சதையுமான மனிதன், தன்னை பிரபஞ்ச சக்தியுடன் ஒன்றுபட்டுக் காணும் ஆன்மீக உயர்நிலைக்குச் செல்வதன் ஒரு குறுக்குவெட்டுச் சித்திரம். பாரதி பற்றி இதுவரை வெளிவந்த வரலாற்றுப் பதிவுகளில் சிதறலாகக் கிடந்த பல தகவல்களை இசையாலும் சிறந்த ஒளிப்பதிவாலும் ஒருங்கிணைத்துத் தந்திருக்கிறார் இயக்குனர்.
இயக்கம்: உஷா ராஜேஸ்வரி, வசனம், ஒளிப்பதிவு: நிரஞ்சன் பாரதி, டாக்டர், இசையமைப்பு: ராஜ்குமார் பாரதி , நடிகர்கள்: பாரதி: பிரபல ஊடகவியலாளர் கார்த்திக் கோபிநாத் , செல்லம்மா: பரதக் கலைஞர் விஜினா, இளங்கோ குமணன், இசைக்கவி ரமணன், பாடகர்கள்: சிக்கில் குருசரண் மற்றும் அபிஷேக் ரகுராம். தமிழ்நாட்டின் எழில் கொஞ்சும் இய்றகைக் காட்சிகளை ட்றோண் தொழில்நுட்பத்தைப் பாவித்துப் படமாக்கியிருப்பது கண்களுக்கு விருந்தாகவிருக்கிறது.
தயாரிப்பாளரும் ஶ்ரீராமகிருஷ்ண பக்தருமான சௌந்தர்யா சுகுமார் ஐயர் குருதேவருக்கு இந்தப் படத்தை சமர்ப்பணம் செய்திருக்கிறார்.
கட்டாயம் பார்க்கவேண்டிய ஆவணப் படம்.
