Spread the love
அறிவித்தல்

இன்று வேகமாகப் பரவிக்கொண்டிருக்கும் கொறோனாவைரஸ் கொள்ளைநோய், உலகின் பலரின் உயிர்களைப் பறித்து வருவதுடன், பல்லாயிரக்கணக்கோரின் தேகாரோக்கியத்தையும், வாழ்வாதாரங்களையும் வெகுவாகப் பாதித்து வருகிறது என்பதை எல்லோரும் அறிவீர்கள்.

கொறோனாவைரஸ் பாதிப்பினால் வேலையற்றோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதனால், இலங்கையின் பல பாகங்களிலும், குறிப்பாக வசதிகள் குறைந்த பகுதிகளில் அன்றாடம் தினக் கூலிக்குச் சென்று சிறுகச் சம்பாதித்து வந்த வருமானத்தில் தங்கியிருந்த பல குடும்பங்கள் பல வாழ்வாதாரமின்றி நிர்க்கதியாக விடப்பட்டுள்ளன. இதன் காரணமாக, பல குடும்பங்கள் அனைத்துலக மருத்துவ நல அமைப்பிடம் (IMHO) உதவிகளைக் கோரியுள்ளன.

வறிய மற்றும், மீள் குடியேற்றப்பட்ட சமூகங்களிடமிருந்து பெற்ற தகவல்களை மிகவும் அவதானமாக ஆராய்ந்து எடுத்த முடிவுகளின்படி, யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, மூதூர், மட்டக்களப்பு மற்றும் மலையகப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு உதவிகளை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவ்வுதவித் திட்டத்தின்கீழ், மேற்கண்ட பகுதிகளில் வாழும் 10,000 வறிய குடும்பங்களுக்கு அடிப்படை உணவு வசதிகளையும், பால்மாவையும் IMHO வழங்கி வருகிறது.

எமது அமைப்பின் சேவைகளைச் செயற்படுத்த எம்முடன் நீண்டகாலமாக நமது மண்ணிலிருந்து உதவிசெய்துவரும், நம்பிக்கைக்குரிய மருத்துவ மற்றும் நிர்வாகப் பின்புலமுள்ள அமைப்புக்கள், இப் பகுதிகளிலுள்ள பாதிக்கப்பட்ட மக்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு இவ்வுதவிகளை வழங்குவார்கள். அத்தோடு, இக் குடும்பங்களுக்குத் தேவையான பொருட்களைத் தாமே கொள்வனவு செய்து சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு எடுத்துச் சென்று விநியோகம் செய்வார்கள்.

இதற்கான மொத்தச் செலவாக உத்தேசகிட்டுள்ள தொகை: $50,000

இது வரையில், IMHO $17,000 டாலர்களை வன்னி, யாழ்ப்பாண மாவட்டங்களிலுள்ள நலன்புரி மையங்களிலுள்ள மீள்குடியேற்றப்பட்ட மக்களினதும், மலையக மக்களினதும், உலருணவு மற்றும் நோய்த்தவிர்ப்பு உபகரணங்களின் தேவைகளுக்காக அன்பளிப்புச் செய்துள்ளது. அத்தோடு, 1,000 மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு $16,000 டாலர்களை கடனாகவும் வழங்கியுள்ளது.

தற்போதுள்ள சூழ்நிலையை உத்தேசித்து, இந்த வருடம் ஜூன் மாதம் நடைபெறவிருந்த, அமைப்பின் வருடாந்த பொதுக்கூட்டத்தைப் பின்போட்டுள்ளோம். எமது செயற்திட்டங்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான பெரும்பான்மையான நிதி இன் நிகழ்வின்போது சேகரிக்கப்படுவதே வழக்கம். தற்போதுள்ள மிகவும் அபாயகரமான நிலைமையில் மக்களிடம் உதவி கோருவதையிட்டு அமைப்பின் இயக்குனர் சபை தயக்கம் காட்டியபோதும், நமது மக்களின் உயிராதாரப் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதும் எமது கடமையாதலால், இயலுமான, பெருமனது கொண்ட நண்பர்களிடமும், தாரளமனமுடையவர்களிடமும் இவ்வவசர உதவியைக் கேட்டு நிற்கின்றோம்.

நன்றி,

இயக்குனர் சபை, அனைத்துலக மருத்துவ நல அமைப்பு

https://www.theimho.org/make-donation

Print Friendly, PDF & Email
Related:  உமிழ்நீர்ப் பரிசோதனை மூலம் கொறோணாவைரஸைக் கண்டுபிடித்தல் - யேல் பலகலைக்கழகம் சாதனை
கோவிட்-19 | IMHO வின் மனிதாபிமான உதவி கோரல்
'உதவுங்கரங்கள்' திடடத்தின் கீழ், IMHO USA மலையக மக்களுக்கு உதவி

கோவிட்-19 | IMHO வின் மனிதாபிமான உதவி கோரல்