Spread the love

ஒட்டவா மே 26, 20220: கோவிட் -19 விடயத்தில் அரசு எதையோ மறைப்பதாக கனடிய மக்களில் பாதிப்பேர் நம்புவதாக கருத்துக்கணிப்பொன்று கூறுகிறது.

லெஜெர் (Leger) , மற்றும் அசோசியேசன் ஃபோர் கனேடியன் ஸ்ரடீஸ் (Association for Canadian Studies) ஆகிய நிறுவனங்களினால் மேற்கொள்ளப்பட்ட இக் கருத்துக்கணிப்பிந்படி, 50% மானோர், கனடிய அரசு, இந் நோய் சம்பந்தமான சில விடயங்களை வேண்டுமென்றே மறைத்து வைத்திருக்கிறது என நம்புகிறார்கள்.

“அரசின் நோய்க்கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் மீதான நம்பிக்கை அதிகமாக உள்ள இந்தெ நேரத்தில், இந்த எண்ணிக்கை மிகவும் அதிகமானது” என லேஜெர் நிறுவனத்தின் உப தலைவரான கிறிஸ்டியன் போர்க் தெரிவித்துள்ளார்.



‘நோய்க்கட்டுப்பாட்டு விடயங்களில் அரசு சரியான நடவடிக்கைகளை எடுத்துவருகிறாதா எனக் கேட்கப்பட்டபோது, 68% மானோர், தமது நகராட்சி அரசின் நடவடிக்கைகள் மீது திருப்தியயும், 74% மானோர் மத்திய அரசு மீதான திருப்தியையும், 78% மானோர் தமது மாநில அரசின் மீதான திருப்தியையும் தெரிவித்திருக்கிறார்கள்.

வைரஸ் பற்றிய சில விடயங்களை மறைப்பதாக நம்புபவர்களில் கியூபெக் மாகாணம், 60% த்தில், முன்னணியில் இருக்கிறது. கியூபெக் மாகாணத்தில், நேற்றுவரை, 48,000 உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுக்களும், 4000 மரணங்களும் சம்பவித்துள்ளன. கனடாவிந் மாகாணங்களிலும், பிரதேசங்களிலும் இதுவே மிக அதிகமானதாகும்.

மே 22 – 25 வரி, 1,510 கனடியர்களிடம் இக் கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டது.

9 வதந்திகள்

கொறோனாவைரஸ் ஏன், எப்படி வந்தது என்பதுபற்றி உலாவும் 9 வதந்திகள் பற்றியும் கருத்துக்கணிப்பில் கேட்கப்பட்டிருந்தது. இவற்றில், இந் நோயின் பரவலுக்கு பில் கேட்ஸ், 5G அலைக்கற்றை போன்றவை காரணம் என்பதையோ அல்லது கோவிட்-19 என ஒன்று இருக்கவேயில்லை என்பது போன்ற வதந்திகளியோ நம்புபவர்கள் 15% த்துக்கும் குறைவாகவே காணப்பட்டனர்.

அதே வேளை இவ் வைரஸ் சீன அரசினாலோ அல்லது அங்குள்ள ஆய்வுகூடத்திலோ உருவாக்கப்பட்டது என்பதை மூன்றிலொரு பங்கினர் நம்புகின்றனர். 19% மானோர், கோவிட்-19 மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை பெருப்பிக்கப்பட்டிருக்கிறது என நம்புகின்றனர். 50% த்துக்கு மேலானோர் இந்த 9 வதந்திகளில் ஒன்றாவது உண்மை என நம்புகின்றனர்.

தனது அரசு வெளிப்படையானதாக இருக்கும் என ஜஸ்டின் ட்றூடோ திங்களன்று ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார். (கனேடியன் பிரெஸ்)


Print Friendly, PDF & Email
Related:  மொன்றியல் | சிறுபான்மையினர் வாழும் பகுதிகளில் பாதிப்பு அதிகம் - ஆய்வு