Sri LankaUS & Canada

கோவிட்-19 நோய்த்தடுப்பு முயற்சிகளுக்கு இலங்கைக்கு, கனடா $400,000 டாலர்கள் உதவி!

நோய்த்தொற்றுக் காலத்தில் பாலியல் ரீதியாகவும், இனவிருத்தி விடயங்கள் தொடர்பாகவும் பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவிகள் செய்யும் நோக்கில் ஐ.நா. சனத்தொகை நிதியத்தின் (UNFPA), பங்களிப்புடன் இவ்வுதவி பாவிக்கப்படும் என இலங்கை, மாலைதீவுகளுக்கான கனடியத் தூதுவர் டேவிட் மக்கின்னன் தெரிவித்தார்.

இலங்கையின் சுகாதார, குழந்தைகள் விவகார, சமூக சேவைகள் அமைச்சின் ஆலோசனையோடு முன்னெடுக்கப்பட்டுவரும் இவ்வுதவித் திட்டத்தின் மூலம், குடும்பப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டோர், மகபேற்று சுகாதார நலன்களுக்கான மருத்துவ உபகரணங்கள், பாலின ரீதியான வன்முறைகளைக் கழைய ஊடகப் பிரச்சார முயற்சிகள், நோய்த் தொற்றுக் காலத்தில் பாதிக்கப்படும் பெண்கள், மருத்துவமனைப் பராமரிப்பு சேவைகள் ஆகியன பலன்பெறவுள்ளன.

“நோய்த் தொற்றுத் தடுப்பு முயற்சிகளின்போது அரசுகளினால் மேற்கொள்ளப்படும் ஊரடங்கு, தனிமைப்படுத்தல் முயற்சிகளின்போது அதிகரிக்கும் வன்முறைகளுக்கு இரையாகுபவர்கள் பெண்களும் குழந்தைகளுமென்பது இக்கொள்ளைநோயின் இன்னுமொரு துயரமான பக்கம். ஐ.நா. அமைப்பின் (UNFPA) மூலம் இலங்கை அரசுக்கு இவ்வாதரவை வழங்கக்கூடியமையையிட்டு நாம் மகிழ்வடைகிறோம்” என, இத்திட்டம் பற்றி, கனடிய அரசு சார்பில் தூதுவர் டேவிட் மக்கின்னன் தெரிவித்தார்.



ஐ.நா.அமைப்பின் (UNFPA) பிரதிநிதி றிட்சு நாக்கென், இது பற்றிக் குறிப்பிடுகையில், ” கோவிட்-19 தடுப்பு முயற்சிகள் ஆண்களுக்கும், பெண்களுக்கும் வெவ்வேறு விதமான தேவைகளை உருவாக்கியிருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இலகுவாகப் பாதிக்கப்படக்கூடிய பெண்கள், சிறுமிகளின் தேவைகள், இக் காலத்தில், மையைப்படுத்தப்படவேண்டியவையாகும்” எனத் தெரிவித்தார்.

இலங்கையின் ஒவ்வொரு துறைகளிலும், பெண்கள், சிறுமிகள் எதிர்நோக்கும் சமத்துவமின்மை, இந் நோய்க்காலத்தில் மேலும் மோசமடைந்துள்ளது. பாலியல், இனவிருத்தி விடயங்களில் அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்ய அரச அங்கங்களினால் முடியாதுள்ளது. பாலின வன்முறைகள் தொடர்பாக அவர்களுக்கு இப்போதுதான் தேவைகள் அதிகரித்துள்ளன.

இத் தருணத்தில் கனடாவின் உதவியுடன் ஐ.நா. அமைப்பு, கனடாவின் சர்வதேச மகளிர் உதவித் திட்டத்தின் ஆலோசனைகளோடு இத் திட்டத்தை நிர்வகிக்கவிருக்கிறது.