Spread the love

ஹான் குடும்பம், ஸ்கொட்லாந்தின் மிகப்பெரிய குடும்பம் என்ற விருதைப் பெற்ற ஒன்று. றோய், எம்மா தம்பதிகளுக்கு 13 பிள்ளைகள். அவற்றில் 10 குழந்தைகள் தற்போது வீட்டில் வசிக்கின்றனர்.

துரதிர்ஷ்டவசமாக றோயிற்கு கோவிட்-19 நோய் பிடித்துவிட்டது. தற்போது அவர் சுய தனிமையில் வசிக்கிறார்.

கோவிட்-19 தொற்று வந்ததையிட்டு மகிழும்  13 பிள்ளைகளின் தந்தை! 1
13 பீள்ளைகளுடன் றோய், எம்மா ஹான்

றோய் நைன்வெல்ஸ் மர்த்துவமனையில் தாதியாகப் பணிபுரிகிறார். பல கோவிட்-19 நோயாளிகளுடளிகளுடனும் தான் பணிபுரிந்ததாகவும், எப்போதும் பாதுகாப்புக் கவசங்களை அணிந்துவருவதாகவும் ஆனால் எப்படியோ தனக்கும் நோய் தொற்றிவிட்டதென்றும் கூறுகிறார்.

றோய்க்கு நோய் தொற்றிச் சில நாட்களாகின்றன. பெரிதளவில் பாதிக்கப்படவில்லை என்கிறார். “எங்களுக்கு நோய் தொற்றிநால் அது சுப்பர் மார்க்கட்டிலிருந்து தான் தொற்றும் என்று நாங்கள் பகிடியாகப் பேசுவதுண்டு. இதை நான் எதிர்பார்க்கவில்லை. நான் வேலைக்குப் போகமுடியாததையிட்டு வ்அருத்தமாகவிருக்கிறது”

ஹான் வீட்டுக்காரர் எல்லோரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். ஹானுக்கு இன்னும் ஏழு நாட்கள் இருக்கின்றன.

எனக்கு இந்த நோய் வந்ததையிட்டு உண்மையில் சந்தோசப்படுகிறேன். எனது பிள்ளைகளோடு அதிக நேரம் செலவழிக்க முடிகிறது. இதனால் எந்தவிதத்திலும் எனது வாழ்க்கைமுறையில் மாற்றம் ஏற்படவில்லை. திரும்பி வேலைக்குப் போகும்போது எனக்கு மன உறுதி மேலும் அதிகரித்திருக்கும்

றோய் ஹான்

50 வயதுடைய ஹானுக்கு type 2 நீரிழிவு இருக்கிறது. பொஹுவாகவே தான் உஅடல் நலத்தைப் பேணி வருபவன் என்கிறார். விரைவில் சுகமாகி வேலைக்குப் போகவேண்டுமென விரும்புவதாகச் சொல்கிறார். இந்தக் கொள்ளைநோயின் முன்னணியில் நின்று போராடவேண்டுமென ஆசைப்படுகிறார்.

“எனக்கு இந்த நோய் வந்ததையிட்டு உண்மையில் சந்தோசப்படுகிறேன். எனது பிள்ளைகளோடு அதிக நேரம் செலவழிக்க முடிகிறது. இதனால் எந்தவிதத்திலும் எனது வாழ்க்கைமுறையில் மாற்றம் ஏற்படவில்லை. திரும்பி வேலைக்குப் போகும்போது எனக்கு மன உறுதி மேலும் அதிகரித்திருக்கும்.

“எங்கள் வீட்டில் நிறையப் பேருள்ளார்கள். அதனால் நாங்கள் ‘மந்தை நிர்ப்பீடனம்’ பெறப் போகிறோம் என எங்களையே பரிகாசம் செய்துகொள்கிறோம்” என்கிறார்.

ஹானுக்கு 5 முதல் 28 வயதுவரை பிள்ளைகளுண்டு. மனைவி ஒரு கபே வைத்திருக்கிறார். ஒரு காலத்தில் இக் குடும்பம் வாரத்துக்கு 50 பைண்ட்டுகள் பால், 21 பாண்கள், 5 பெட்டி சீரியல் என்று உணவுக்காகச் செலவு செய்ததுண்டு. இப்போது சுப்பர் மார்க்கட்டுகள் தனி ஒருவருக்கான உணவுத் தொகையை மட்டுப்படுத்திவிட்டது. மளிகைப் பொருட்களை வாங்குவது இப்போது மிகவும் சிரமமாகிவிட்டது.“பெரிய குடும்பாமாதலால் சமூக விலக்கு நடைமுறைகளை எங்கள் குடும்பம் பின்பற்றுவது இலகுவாக இருப்பதில்லை. மற்றவர்களைப் போலல்லாது நாங்கள் கடைகளுக்கு அடிக்கடி செல்லவேண்டியிருக்கிறது. இதனால் எங்களுக்குத் தொற்று வருவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம்” என்கிறார் ஹானின் மனைவி எம்மா.

Related:  ஐரோப்பிய ஒன்றியம் தேர்தல் கண்காணிப்பாளர்களை இலங்கைக்கு அனுப்ப மறுப்பு

“றோய் இற்குத் தொற்று வந்துவிட்டது என்றவுடன் நான் பயந்துபோய்விட்டேன். முடிவு நெருங்கிவிட்டதென நினைத்து கதறத் தொடங்கி விட்டேன். நல்ல காலம், பிள்ளைகள் எல்லோரும் ஆதரவு தருகிறார்கள். தனிமைப்படுத்தல் ஆரம்பத்தில் கஷ்டமாகவே இருந்தது. இப்போது எல்லோரும் பழகிக்கொண்டுவிட்டோம். வாழ்க்கை இலகுவாகவும் இருக்கிறது” என்கிறார் அவர்.

Print Friendly, PDF & Email