கோவிட்-19 | தொடர்புகளைக் கண்டுபிடிக்க TraceTogether டோக்கன்கள் – சிங்கப்பூரில் அறிமுகம்
சிங்கப்பூரின்TraceTogether டோக்கன்

கோவிட்-19 | தொடர்புகளைக் கண்டுபிடிக்க TraceTogether டோக்கன்கள் – சிங்கப்பூரில் அறிமுகம்

Spread the love

கோவிட்-19 நோய்த் தொற்றுக் கண்டவர்கள் யாரிடமெல்லாம் உடல் ரீதியாக நெருக்கமாக இருந்தார்களோ அவர்களைக் கண்டுபிடித்துப் பரிசோதனைகளை மேற்கொள்ளுவதற்கு சிங்கப்பூர் அரசாங்கம் புதிய திட்டமொன்றை செப்டம்பர் 14 முதல் நடைமுறைக்குக் கொண்டுவந்துள்ளது என சிங்கப்பூரின் Smart Nation Initiative திட்டத்துக்குப் பொறுப்பான அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோவிட்-19 | தொடர்புகளைக் கண்டுபிடிக்க TraceTogether டோக்கன்கள் - சிங்கப்பூரில் அறிமுகம் 1
அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் (வலது), பாவனையாளர் அஜித் குமாருடன்

TraceTogether என்ற பெயருடைய இந்த செயலியைப் பயன்படுத்த ஸ்மார்ட் ஃபோன்கள் தேவையில்லை. அரசாங்கத்தினால் வழங்கப்படும் ஒருவகை டோக்கன் (token) மட்டுமே போதும். ஃபோன்கள் இல்லாதவர்களும், பாவிக்கத் தெரியாதவர்களும், குறிப்பாக முதியவர்கள், இந்த டோக்கனைத் தம்மோடு வைத்திருந்தாலே போதும்.

இவர்களின் நடாமாடங்கள் பற்றிய முழுமையான விபரங்களும் இட் டோக்கனில் சேகரிக்கப்படும். Bluetooth தொழில்நுட்பத்தின் மூலம் இத் தகவல்கள் தரவிறக்கம் செய்யப்படும். ஏற்கெனெவே சிங்கப்பூர் அரசாங்கத்தினால் பாவனைக்கு விடப்பட்ட ஸ்மார்ட் ஃபோன், தொடர்புகளைத் தேடும் செயலியுடன் இட் டோக்கனின் தரவுகள் இலகுவாக சங்கமமாகும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

நாட்டின் 70% மானோராவது இத் திட்டத்தில் பங்குபற்றுவார்கள் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாகவும் இதுவரை 2.4 மில்லியன் தரவிறக்கங்கள் நடைபெற்றுள்ளதாகவும், இது சிஙக்ப்பூரின் சனத்தொகையின் 40% த்துக்குச் சமன் எனவும் அமைச்சர் டாக்டர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.தெரிந்தெடுக்கப்பட்ட 10,000 முதியோர்களுக்கு, டோக்கன்களின் முதலாவது விநியோகம், ஜூன் மாதம் நடைபெற்றுள்ளது. தொடர்புகளைத் தேடும் செயலிகளின் பாவனையில் உலகில் சிங்கப்பூர் முதலிடம் வகிக்கிறது. சிங்கப்பூரின் 5% மான மக்கள் கைத் தொலைபேசி பாவிப்பதில்லை.

ஒவ்வொரு டோக்கனும் அதன் பாவனையாலரின் பேரில் பதியப்பட்டிருக்கும். இவர்கள் கோவிட் தொற்றூள்ள ஒருவருக்கு அருகில் சென்றிருந்தால் அத் தகவல் டோக்கனில் பதியப்பட்டுவிடும். நோய் தொற்றியவரின் பிரத்தியேக தகவல்கள் டோக்கனில் பதியப்படமாட்டா. அவை பிறிதொரு வகையில் தெரியப்படுத்தப்படும். டோக்கன் வைத்திருக்கும் ஒருவருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டால் அவரது டோக்கன் பரிசோதிக்கப்பட்டு அவரது தொடர்புகள் அனைத்தும் ஆராயப்படும்.

சிங்கப்பூர் அரசாங்கத்தின் Government Technology Agency (GovTech) உடன் இணைந்து சுகாதார அமைச்சு இட் டோக்கனைத் தயாரித்திருக்கிறது.

Print Friendly, PDF & Email