Spread the love

ஒன்ராறியோ பாடசாலைகள் மே 31 வரை மூடப்பட்டிருக்கும்

நீண்டகால வீட்டு முடக்கத்துக்குப் பின் கனடாவின் ஒன்ராறியோ மாகாண மக்கள் தமது இயல்புவாழ்வை நோக்கிய முதற் படியை எடுத்து வைக்கிறார்கள்.

கனடாவின் இதரமாகாணங்களோடு ஒப்பிடுகையில், ஆரம்பத்தில் குழப்பநிலை காணப்பட்டாலும் ஒன்ராறியோ மாகாண அரசின் நிதானமான செயற்பாட்டுமுறைகளினால் தொற்றுக்களும் இறப்புக்களும் ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மாகாண முதல்வர் டக் ஃபோர்ட், இவ் விடயத்தில் சிறந்த தலைமைத்துவததைக் காட்டியிருக்கிறார்.

நிலைமை ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட நிலையில், சரியும் பொருளாதாரத்தை நிலை நிறுத்தும் அடுத்த கட்டமாக மக்கள் நடமாட்டத்தையும் சந்தைகள், தொழிற்சாலைகள், பொழுதுபோக்கு அம்சங்கள் ஆகியவற்றையும் சிறிது சிறிதாக இயல்பு நிலைக்குக் கொண்டுவரும் திட்டத்தின் முதற்படியாக, மாகாண அரசு சில தேர்வு செய்யப்பட்ட துறைகளின் மேல் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளைத் தளர்த்துகிறது.

இதன் பிரகாரம் தளர்வுகள் அனுமதிக்கப்படும் துறைகள் பின்வருமாறு:

கட்டுமானப் பணிகள்

  • தொழில் நிறுவனங்கள் திறக்கப்படலாம். வீட்டிலிருந்து பணி புரிபவர்கள் தொடர்ந்தும் அனுமதிக்கப்படுவார்கள்
  • எல்லாவிதமான கட்டுமானங்களும் மீளவும் ஆரம்பிக்கப்படலாம்
  • பராமரிப்பு, திருத்த வேலைகள், சொத்து முகாமைத்துவ சேவைகள், துப்புரவாக்கல், வர்ணம் பூசுதல், நீச்சல் குளப் பராமரிப்பு ஆகியன் தொடரப்படலாம்

சில்லறை வியாபாரம்

  • தெருவில் நுழைவாசல்களுள்ள,பண்டங்களை வாசல்களுக்கு வெளியே விநியோகிக்கும் வசதியுள்ள, சில்லறை வியாபார நிலையங்கள், சமூக இடைவெளிக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க முடியுமானவை திறக்கப்படலாம்

பொழுதுபோக்கு

  • கோல்ஃப் விளையாட்டுத் திடல்கள் திறக்கப்படலாம். திடல் வீடுகள் (clubhouses), கழிப்பறை மற்றும் உணவுப் பரிமாற்றப் பாவனைகளுக்கு மட்டுமே திறக்கப்பட அனுமதியுண்டு
  • கடற்கரைப் பொழுதுபோக்குத் துறைமுகங்கள், வாடி வீடுகள் ஆகியனவும் திறக்கப்படலாம்
  • தனியார் பூங்காக்கள், முகாம்கள் அமைக்கும் மைதானங்கள், ஒப்பந்தங்களை வைத்திருக்கும் பயண வண்டிகளின் உரிமையாளர்கள் வண்டிகளைத் தரிக்குமிடங்கள் திறக்கப்படலாம்
  • விலங்குகளின் பராமரிப்பு நிலையங்கள்


சேவைகளை அடிப்படையாகக்கொண்ட வியாபாரங்கள்

  • வழக்கமான விலங்கு வைத்திய நிலையங்கள்
  • வளர்ப்புமிருகங்களை சீர்ப்படுத்தல், பயிற்றுதல், காவல் காத்தல்
  • வாசிக சாலைகள் (புத்தகங்களை எடுக்கவும், திருப்பவும் மட்டும்)
  • வீட்டு வேலைக்காரர், குழந்தை பராமரிப்பாளர் தமது வேலைகளுக்குத் திரும்பலாம்

இங்கு குறிப்பிடப்படாத அனைத்து ஸ்தாபனங்களும் மறு அறிவித்தல் வரும்வரை நோய்த் தடுப்புக் காட்டுப்பாட்டு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும்.

ஒன்ராறியோ பாடசாலைகள் மே 31 வரை மூடப்பட்டிருக்கும்

Print Friendly, PDF & Email
Related:  100 மில்லியன் அளவுகள் (doses) ரஷ்யாவின் கோவிட்-19 தடுப்பு மருந்தை இந்தியா வாங்குகிறது
கோவிட்-19 | ஒன்ராறியோ மாகாணத்தின் இயல்புவாழ்வை நோக்கிய முதல் படி

கோவிட்-19 | ஒன்ராறியோ மாகாணத்தின் இயல்புவாழ்வை நோக்கிய முதல் படி