• Post category:CANADA / HEALTH
  • Post published:January 12, 2021
Spread the love

கோவிட் பெருந்தொற்று எதிர்பார்த்ததைவிட அதி தீவிரமாகப் பரவிவரும் காரணத்தால் ஒன்ராறியோ மாகாண அரசு தனது இரண்டாவது அவசரகாலப் பிரகடனத்தை இன்று (செவ்வாய்) அறிவித்துள்ளது.

“வீட்டில் இருங்கள்” என்ற சுலோகத்தோடு வியாழன் அதிகாலை 12:01 முதல் (ஜனவரி 14) நடைமுறைக்கு வரும் இந்த அவசரகால அறிவிப்பு, ஒன்ராறியோ மாகாணத்தின் இரண்டாவது பிரகடனமாகும்.

அவசரகாலப் பிரகடனக் காலத்தில் செய்யக்கூடிய அல்லது அனுமதிக்கப்பட்ட சேவைகள் / செயற்பாடுகள்:

  • பலசரக்குக் கடைகள் (மளிகை)
  • மருந்தகங்கள்
  • மருத்துவ சேவைகள்
  • தேகாப்பியாசம்
  • வரையறுக்கப்பட்ட கட்டாய சேவைகள்

மேலதிகமாக:

  • எந்தவொரு பணியாளரும் தனது பணியை வீட்டிலிருந்து செய்ய முடியுமானால் அதைச் செய்துகொள்ள வேண்டும்.
  • பொதுவெளியில், ஒழுங்கமைக்கப்பட்ட (organized) அல்லது சமூக (social) ஒன்றுகூடல்களில் 5 மேருக்கு மேல் கலந்துகொள்ள முடியாது.
  • திறக்கப்பட்டிருக்கும் வியாபார நிலையங்களிலோ அல்லது ஸ்தாபனங்களிலோ பணி புரியும் அல்லது வருகைதரும் ஒவ்வொருவரும் முகக்கவசமோ அல்லது மறை அங்கியோ அணிந்திருக்க வேண்டும்.
  • வெளியிடங்களில் இரண்டு தனிப்பட்டவர்களுக்கிடையில் 2 மீட்டர்கள் தூரத்தைக் கடைப்பிடிக்க முடியாதபோது முகக்கவசங்கள் / அங்கிகள் அணியப்பட வேண்டும்.
  • இரும்பு, தளபாடக் கடைகள் உடபட, அவசியமற்ற சில்லறை வியாபார நிலையங்கள், மதுபான விற்பனை நிலையங்கள், நடைபாதை விநியோக வியாபார நிலையங்கள் ஆகியன காலை 7 மணிக்குப் பின்னர் திறக்கப்பட்டு மாலை 8 மணிக்கு முன்னதாக மூடப்பட்டுவிட வேண்டும். உணவு விற்பனை, மருந்தகம், எரிபொருள் விற்பனை, கொன்வீனியென்ஸ் கடைகள், உணவு விநியோகம் செய்யும் சாப்பாட்டுக் கடைகள் ஆகியன இந் நேரக்கட்டுப்பாட்டை அனுசரிக்கத் தேவையில்லை.
  • நில அளவை தவிர்ந்த அவசியமற்ற கட்டுமான சேவைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
     
  • ரொறோண்டோ, விண்ட்சர்-எஸ்ஸெக்ஸ், பீல், யோர்க், ஹமில்ட்டன் பிராந்தியங்களில் ஆசிரிய-மாணவ நேரடிக் கல்வி நடைபெறமாட்டாது. 


அபராதம் / தண்டம்

ஒன்ராறியோ மீள்திறப்புச் சட்டம் (Reopening Ontario Act) விதிக்கும் கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரங்களை அரசாங்கம், ஒன்ராறியோ மாகான காவல்துறை, நகராட்சிக்குட்பட்ட காவல்துறைகள், துணைவிதி நடைமுறைப்படுத்துபவர்கள், வேலைதலப் பரிசோதகர்கள் ஆகியோருக்கு வழங்கியுள்ளது. சட்டத்தை மீறும் நிலையங்கள், ஸ்தாபனங்களை மூடுவதற்கும், கூட்டங்களைக் கலைப்பதற்கும், அபராதங்களை விதிப்பதற்கும் இவர்களுக்கு அதிகாரங்களுணடு.

தற்போதைய கோவிட் நிலவரம்

  • 40% மான ஒன்ராறியோவின் நெடுநாட் பராமரிப்பு நிலையங்களில் த்ற்போது நோய்த்தொற்று உள்ளது. இந்நிலைய வாசிகளில் 198 பேரும், இரண்டு பணியாளரும் இறந்துள்ளனர்.
  • 224,000 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளார்கள், 5,021 பேர் மரணமடைந்துள்ளனர்.
Print Friendly, PDF & Email
Related:  கோவிட் தொற்று விசாரணைகளை மேற்கொள்ள உலக சுகாதார நிறுவன நிபுணர்கள் சீனா சென்றடைந்தனர்