Spread the love

இலங்கையில் கோவிட்-19 வேகமாகப் பரவிவருவதாகவும், அரசாங்கம் இவ் விடயங்களை மூடி மறைப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணமுள்ளன.

நேற்று, தம்புல்ல பேருந்து நிலையத்தில் மலசலகூடத்துக்கு முன்னால் ஒரு இராணுவவீரர் மரணமடைந்திருக்கிறார். சுமார் அரை மணித்தியாலமாக, நோய் தொற்றும் என்ற பயத்தில் எவரும் அவருக்கு உதவிசெய்ய முன்வரவில்லை எனவும் இறுதியாக சில இளைஞர்கள் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது சிகிச்சை பலனளிக்காமல் அவர் மரணமடைந்துவிட்டதாகவும் தெரிகிறது.

இறந்தவர் கலெவலவிலுள்ள பலிபொல என்ற இடத்தைச் சேர்ந்த துஷார குமார ஜயசிங்க என அறியப்படுகிறது. தம்புல்லவில், நான்கு நாட்கள் ஊரடங்கு உத்தரவின் பின்னர் நேற்று அது தளர்த்தப்பட்டிருந்தது.

மின்னேரிய கடற்படை முகாமைச் சேர்ந்த வீரர் ஒருவரும் இப்படியான ஒரு நிலைமையில் மரணமடைந்ததாகத் தெரியவருகிறது. இருப்பினும் அரசாங்கம் இம் மரணத்தைக் கோவிட் மரணம் என இதுவரை அங்கீகரிக்கவில்லை. இவ் வீரர் வெலிசர கடற்படை முகாமைச் சேர்ந்தவரெனவும்,ஹோமகம மருத்துவமனையில் கொறோனாவைரஸுக்கு சிகிச்சை பெற்றுச் சமீபத்தில் உயிரிழந்த 72 வயதுள்ள பெண்ணொருவருக்கு இவர் மிக நெருக்கமானவர் எனவும் கூறப்படுகிறது.

அதே வேளை, 4652 கடற்படையினர் இதுவரை பரிசோதிக்கப்பட்டு, அவர்களில் 836 நோய்தொற்று உள்ளதென உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்களில் 214 பேர் புனானி முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பரிசோதனை உபகரணங்கள் தட்டுப்பாடு

அதே வேளை, பரிசோதனை உபகரணங்களின் தட்டுப்பாடு காரணமாக, மிகத் தீவிர தொற்றுள்ளவர்கள் மட்டுமே பரிசோதிக்கப்படுகிறார்கள். பண்டாரநாயக்கா மாவத்த (தோட்டம்) யில் வாழும் சேரி மக்களில் 50-60 தொற்றுள்ளவர்களுக்குப் பரிசோதனை மறுக்கப்பட்டுள்ளௌதாகத் தெரிகிரது. கொழும்பு மருத்துவமனையில் 1000 பரிசோதனைகள் செய்யக்கூடிய வசதிகள் இருந்தும், 400-500 பரிசோதனைகளே செய்யப்படுகின்றன. நோய்த் தொற்று எதுவும் இலாதிருந்தும், அலரி மாளிகை, ஜனாதிபதி செயலகம் ஆகியவற்றில் தினமும் பரிசோதனைகள் செய்யபட்டு வருவதாக அறியப்படுகிறது.


Print Friendly, PDF & Email
Related:  புதிய கோவிட் வைரஸிலிருந்து மக்களை எமது மருந்து பாதுகாக்கும் - அஸ்ட்றாசெனிக்கா முதன்மை நிர்வாகி