Spread the love

கோவிட்-19 | இரண்டு மடங்கு நோயாளிகள் உணவகங்களில் உணவருந்தியவர்கள் - ஆய்வு 1

கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களில் இரண்டு மடங்கினர், அறிகுறிகள் காணப்படுவதற்கு 14 நாட்களுக்கு முதல், உணவகங்களில் (restaurants) உணவருந்தியிருக்கிறார்கள் எனப் புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

கடந்த வெள்ளியன்று, அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு மையத்தினால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள், அமெரிக்காவின் 11 மருத்துவ நிலையங்களில் ஜூலை 1 முதல் 229 வரை எடுக்கப்பட்ட, நோயறிகுறிகளுடன் வந்தோரிடமிருந்து பெறப்பட்ட தரவுகளிலிருந்து பெறப்பட்டவையாகும். இவர்களில் 71% பேர் பொது இடங்களில் முகக்கவசம் அணிந்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

ஏறத்தாள இதே எண்ணிக்கை உடையவர்கள், உடற்பயிற்சி நிலையங்கள் (gyms), சிகை அலங்கார நிலையங்கள் (hair salons) அல்லது மத வழிபாட்டு ஸ்தாபனங்களுக்குச் சென்றிருப்பதும் தெரிய வந்திருக்கிறது.

பெரும்பாலான தொற்றுக்கள், முகக் கவசங்களை அகற்றிவிட்டு உணவருந்தும்போதோ அல்லது பானங்களை அருந்தும்போதோ ‘மூடிய’ நிலையங்களில் காற்றோட்டம் குறைவாக இருப்பதனால் ஏற்பட்டிருக்கலாம் என ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர்.

“சமூக இடைவெளி, முகக்கவசப் பாவனை ஆகியன நடைமுறையில் இருந்தாலும், காறோட்டம், காற்றின் திசை, காற்றோட்டத்தின் அளவு ஆகியன வைரஸ் தொற்றைத் தீர்மானிக்கின்றன. பானம் அருந்தும்போதும், உணவருந்தும்போதும், முகக்கவசப் பாவனையைச் செவ்வனே நடைமுறைப்படுத்த முடியாது” என இம் மையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாபார நிலையங்கள் மீளவும் திறக்கப்படும்போது, உள்ளக உணவு, பான வழங்கல் நடைமுறையில் இருக்கும் வியாபார நிலையங்களில், வாடிக்கையாளர்களையும், பணியாளர்களையும் பாதுகாக்க, போதுமான பாதுகாப்பு வசதிகள் செய்யப்படவேண்டும் என அவ்வறிக்கை பரிந்துரைக்கின்றது.

Print Friendly, PDF & Email
Related:  கோவிட்-19 | இளையோருக்கு எச்சரிக்கை! - அறிகுறிகள் எதுவுமில்லாது தாக்குகிறது
கோவிட்-19 | இரண்டு மடங்கு நோயாளிகள் உணவகங்களில் உணவருந்தியவர்கள் – ஆய்வு
உணவகங்கள் மூலம் கோவிட் தொற்று

கோவிட்-19 | இரண்டு மடங்கு நோயாளிகள் உணவகங்களில் உணவருந்தியவர்கள் – ஆய்வு