Spread the love

அமெரிக்க நோய்க்கட்டுப்பாட்டு மையம் அறிவிக்கிறது

  • களைப்பு (fatique), வயிற்றுப்போக்கு (diarrhea), மூக்கடைப்பு அல்லது மூக்கு ஒழுக்கு (congestion or runny nose), குமட்டல் அல்லது வாந்தி (nausea or vomiting) ஆகியவற்றை, நோய்க்கட்டுப்பாட்டு மையம் தனது திருத்தப்பட்ட கோவிட்-19 நோயறிகுறிகளின் பட்டியலில் புதிதாகச் சேர்த்துள்ளது.
  • காய்ச்சலும் (fever), இருமலும் (cough) மிக முக்கிய கோவிட்-19 அறிகுறிகளாகக் கருதப்படுகின்றன
  • இன்னுமொரு பொதுவான அறிகுறியாகக் கருதப்படும் மூச்சுத் திணறல் (shortness of breath) அதிகம் ஆபத்தானதாகக் கருதப்படுகிறது
  • தசை வலி (muscle pain), தொண்டை அரிப்பு (sore throat), சுவை அல்லது முகர்விழப்பு (loss of taste or smell) ஆகிய அறிகுறிகளும் சிலரால் தெரிவிக்கபடுகிறது


சீனாவில் கொறோனாவைரஸ் தொற்று பற்றி ஆரம்பத்தில் மூன்று அறிகுறிகளே பல நோயாளிகளாலும் தெரிவிக்கப்பட்டது, அவை: காய்ச்சல், வரட்டு இருமல், மூச்சுத் திணறல். இவர்களில் பலரது நோய்கள் முற்றிய நிலையில் இருந்தமையும், அநேகமாக எல்லோருக்கும் மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்க வேண்டியிருந்தமையும் அவதானிக்கப்பட்டது. இருப்பினும் முறையான தரவுப் பதிவுகள் மேற்கொள்ளப்படாமையால் தீர்க்கமான கட்டுப்பாட்டுச் செயல்முறைகள் எதையும் பின்பற்றமுடியாதுபோனது.

வைரஸ், கொள்ளை நோய் (pandemic) என்னும் அளவுக்குக் கட்டுப்பாடற்று எல்லைகளைத் தாண்டிப் பரவியபோது மேலும் பல நோயறிகுறிகள் அவதானிக்கப்பட்டன. சிலரில் தசை வலியும், சிலரில் கால் விரல்கள் வீக்கமடைந்து இள ஊதா நிறமாக மாறுவதும் அவதானிக்கப்பட்டது. போதுமான தரவுகள் கிடைத்ததும் அமெரிக்க நோய்க்கட்டுப்பாட்டு மையம் தனது பட்டியலில் புதுப் புது அறிகுறிகளைச் சேர்த்து வருகிறது.

அத்தோடு, இந்த வைரஸ், இருதயம், சிறுநீரகம், ஈரல், சிறுகுடல் ஆகிய உறுப்புக்களையும் பாதிக்க்கிறது என விஞ்ஞானிகள் இப்போது உறுதி செய்துள்ளனர். நோய் தொற்றி 2 நாட்கள் முதல் 2 வாரங்களில் தனது அறிகுறிகளைக் காட்டவாரம்பிக்கிறது.

புதிதாக அறிவிக்கப்பட்ட நோயறிகுறிப் பட்டியல்

  • காய்ச்சல் அல்லது குலப்பன் (fever or chills)
  • இருமல் (cough)
  • மூச்சுத் திணறல் அல்லது சுவாசிப்பதில் சிரமம் (shortness of breath or difficulty in breathing)
  • சோர்வு (fatigue)
  • உடல் அல்லது தசை வலி (muscle or body aches)
  • தலைவலி (headache)
  • திடீரென சுவை அல்லது மணத்தை இழத்தல் (sudden loss of taste or smell)
  • தொண்டை அரிப்பு (sore throat)
  • மூக்கடைப்பு அல்லது மூக்கொழுக்கு (congestion or runny nose)
  • குமட்டல் அல்லது வாந்தி (nausea or vomiting)
  • வயிற்றோட்டம் (diarrhea)
Print Friendly, PDF & Email
Related:  அழற்சி (inflammation) என்றால் என்ன?