கோவிட்-19 | அனைத்துலக மருத்துவ அமைப்பின் (IMHO) நிவாரணப் பணிகள்

கோவிட்-19 | அனைத்துலக மருத்துவ அமைப்பின் (IMHO) நிவாரணப் பணிகள்

Spread the love

Update

S. Krishnakumar, Country Director, IMHO Lanka

அனைத்துலக மருத்துவநல அமைப்பு இலங்கையின் வட, கிழக்கு, மலையகப் பகுதிகளில் கோவிட்-19 நிவாரண முயற்சிகளை மேற்கொண்டு வருவது பற்றி ‘மறுமொழி’ யில் ஏற்கெனவே பல செய்திகள் வந்துள்ளன.

இத் தொடர் முயற்சியின் நிகழ்கால நிலைமைகளை, IMHO Lanka பணிப்பாளர் எஸ்.கிருஷ்ணகுமார் அவர்கள், கொடையாளர், நலன் விரும்பிகளுக்கு அவ்வப்போது தெரியப்படுத்தி வருகிறார். இறுதியாக எமக்குக் கிடைத்த அறிக்கையின் சாரம்சம்:

கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டு வரும், உலகின் பல வருமானம் குறைந்த நாடுகளின் வரிசையில் சிறிலங்காவும் ஒன்று. இன் நோய்க்கட்டுப்பாட்டு முயற்சிகளில் ஒன்றாக அரசு, மார்ச் 20, 2020 இல் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்திருந்தது. இந் நடமாட்டத் தடையினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டவர்கள், அன்றாட உழைப்பினால் சீவித்துவந்த குடும்பத்தினர். குழந்தைகள், முதியோர், கர்ப்பிணித் தாய்மார், பாலூட்டும் தாய்மார் எனப் பலர் மோசமாகப் பாதிப்புக்குள்ளாகினர். இந்நிலையைக் கவனமாக ஆராய்ந்த அமெரிக்க அனைத்துலக மருத்துவநல அமைப்பு உடனடியாக நிவாரண முயற்சிகளில் இறங்கியிருந்தது.



இவ்வமைப்பின் முதற்கட்ட நிவாரண முயற்சியாக வடக்கு, கிழக்கு, மலையக பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட 9436 குடும்பங்களுக்கு நிவாரணப் பொதிகளை வழங்குவதாகத் தீர்மானிக்கப்பட்டது.

அத்தோடு, மலையகப் பிரதேசத்திலிலுள்ள 1000 குடும்பங்களுக்கு, தலா ரூபா 3000 கடன் தொகையும், நுவரேலியா மாவட்டத்தில் பணிபுரியும் சுகாதாரப் பணியாளர்களுக்கு நோய்த் தடுப்பு உபகரணங்களும் வழங்குவதாகத் தீர்மானிக்கப்பட்டது.

நிவாரணப் பொதிகள்:

நிவாரணப் பொதிகள் பின்வரும் பண்டங்களைக் கொண்டிருந்தன:

  • உணவுப் பொருட்கள்: ரூ.1000 பெறுமதியான உணவுப் பொருட்கள் (அரிசி, மாவு, பருப்பு, சீனி, சோயா, சம்போசா, உருளைக்கிழங்கு, பால் மா, கருவாடு
  • கடன்: மஸ்கேலியா, ஹப்புகஸ்தான, பிறவுண்லோ தோட்டங்களைச் சேர்ந்த பெண் தலைமைத்துவத்தைக் கொண்ட குடும்பங்களுக்குத் தலா ரூ.3000 கடன் தொகை                 

நிவாரணம் பெறுபவர்களைத் தெரிவு செய்தல்:

நிவாரணம் பெறுபவர்களைத் தெரிவுசெய்வதற்காக, யாழ்ப்பாணம், மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்ட செயாளர்களுடன் IMHO Lanka நேரடியாகத் தொடர்புகளை மேற்கொண்டு நிவாரணம் பெறுநர்களின் பட்டியலைத் தயாரித்தது. இதற்காக அது பின்வரும் இடங்களைத் தெரிவு செய்தது:

  • பிந்தங்கிய பகுதிகள்
  • உதவிப்பணம் பெறும் முகாம்கள்
  • சமீபத்தில் குடியேற்றப்பட்ட பகுதிகள்
  • பெண் தலைமத்துவத்தைக் கொண்ட குடும்பங்கள்
  • மாற்றுவலுக் கொண்டோர்

மேற்கண்ட மதிப்பீட்டு அளவுகோல்களைக்கொண்டு, முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் Assist RR அமைப்பும், கிளிநொச்சி மாவட்டத்தில், CARITAS-HUDEC அமைப்பும், மலையகத்தில் E4D Project Group உம் பெறுநர்களைத் தெரிவுசெய்து உதவியிருந்தன.



உதவி பெற்ற குடும்பத்தினர் மொத்தம் 10,436, விபரம் பின்வருமாறு


மாவட்டம்குடும்பங்களின் எண்ணிக்கை
1யாழ்ப்பாணம்2722
2மன்னார்1000
3முல்லைத்தீவு1000
4கிளிநொச்சி  190
5வவுனியா  500
6திருகோணமலை / மூதூர்1000
7மட்டக்களப்பு2024
8மலையகம்   
நிவாரணப் பொதி
கடன்

1000
1000

மொத்தம்10,436

பொருட்களின் கொள்வனவு:

பெரும்பாலான பொருட்கள், மேலதிக அரசாங்க அதிபர் /பிரிவுச் செயலாளர் மூலம், சதோச கூட்டுறவுக் கடைகளிலும், பலசரக்குக் கடைகளிலும் கட்டுப்பாட்டு விலைகளில் கொள்வனவு செய்யப்பட்டன. அவற்றுக்கான பணம் நேரடியாக அந் நிறுவனங்களுக்கு வங்கிப்பணமாற்றம் மூலம் கொடுக்கப்பட்டது.

விநியோக முறை:

மலையகப் பிரதேசங்கள் தவிர்ந்த ஏனையவற்றில், பிரதேச செயலகங்களூடாக, அந்தந்த மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களது மேற்பார்வையின்கீழ் பொருட்கள் விநியோகிக்கப்பட்டன. IMHO லேபல்கள் ஒட்டப்பட்ட பொதிகளின் விநியோகத்தையும், எந்தவித மேலதிக செலவுகளுமின்றி அவர்களே செய்திருந்தார்கள். தேவைப்பட்ட குடும்பங்களுக்குப் பொதிகள் போய்ச் சேர்ந்தனவா என்பதை IMHO Lanka அலுவலகம் உறுதிசெய்துகொண்டது.

மாவட்ட ரீதியான நிவாரணப் பொதிவழங்கல் விபரங்களுக்கு IMHO Lanka என்ற இணையத்தளத்தோடு தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம்.


Print Friendly, PDF & Email