News & AnalysisSri Lanka

கோவிட் பரவலையும் பொருட்படுத்தாது அரசாங்கம் துறைமுகநகரச் சட்டத்தை நிறைவேற்றவே அவதிப்படுகிறது – ஹர்ஷா டி சில்வா

“”நோய்ப்பரவலைத் தடுக்கும் நோக்கமாக, அவசியமேற்படின், பாராளுமன்றத்தைக் கூட்டாமல் நாங்கள் அரசாங்கத்துடன் தனியாகப் பேசுவதற்கும் தயார்” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேட்டிருந்த்தும், கொறோணாவைப் போலவே நாட்டின் பொருளாதாரமும் முக்கியம் எனவே துறைமுக நகரச் சட்டத்தை முதலில் விவாதித்து நிறைவேற்றவேண்டுமென அரசாங்கம் அவதிப்படுகிறது” என சமாகி ஜன பலவேகய பா.உ. ஹர்ஷா டி சில்வா ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

“நாங்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விட்டோம். விவாதிப்பதற்கு எங்களுக்கு நேரமில்லை. செவ்வாயன்று உச்ச நீதிமன்றம் அதை விசாரிக்கவிருக்கிறது. ஆனால் அதஹ்ற்கு முன்னர் இச் சட்டத்தைப் பாராளுமன்றத்தில் விவாதித்து நிறைவேற்றிவிட அரசு அவசரப்படுகிறது. என்ன நடக்கப்போகிறது என்பதைப் ஒறுத்திருந்து பார்ப்போம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

புதனன்று (13) பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற பாராளுமன்ற விவகாரங்கள் மீதான ஊடகவியலாளர்களின் கேவிகளுக்குப் பதிலளிக்கும்போதே ஹர்ஷா டி சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார்.