HealthWorld

கோவிட் தொற்று விசாரணைகளை மேற்கொள்ள உலக சுகாதார நிறுவன நிபுணர்கள் சீனா சென்றடைந்தனர்


கொறோணாவைரஸ் மூலத்தை அறிவதற்காக, உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழுவிலுள்ள 13 பேர் வூஹான் சென்றடைந்தனர். 15 பேர் கொண்ட் இக் குழுவிலி இருவருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டதன் காரணமாக அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு நிபுணர்களுக்கும், மருத்துவ பரிசோதனைகள் திருப்திகரமாக இல்லாமையால், சீனா அனுமதி மறுத்துள்ளது என அறியப்படுகிறது. இவர்கள் இருவரும் சிங்கப்பூர் வழியாகப் பயணத்தை மேற்கொண்டிருக்கையில் அவர்களது உடலில் கோவிட் தொற்று வந்ததற்கு அறிகுறியான பிறபொருளெதிரிகள் (antibodies) இருந்தமை கண்டுபிடிக்கப்பட்து காரணமெனக் கூறப்படுகிறது. இவ்விருவரும் சிங்கப்பூரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனரெனவும் மீதி 13 பேரும் வூஹானில் இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள் எனவும் உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

மே மாதத்திற்குப் பின்னர் சீனாவின் முதல் கோவிட் மரணம் ஏற்பட்டுள்ளதெனவும், வூஹான் நகர் இருக்கும் ஹூபே மாகாணத்தில் தான் இத் தொற்று அதிகமாகக் காணப்படுகிறது. சீனாவின் 4,635 கோவிட் மரணங்களும் இம் மாகாணத்தில் தான் நிகழ்ந்திருக்கின்றன எனவும் இதனால் அம் மாகாணத்தின் 20 மில்லியன் மக்கள் மீது சீனா மிகவும் இறுக்கமான நடமாட்டக் கட்டுப்பாட்டைக் கொண்டுவந்துள்ளது.

சென்ற வருடம் ஜனவரி மாதம் முதல் கொறோணாவைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட வூஹான் நகர மக்களின் மருத்துவப் பதிவேடுகள் முதல் வைரஸ் மாதிரிகள் (virus samples) வரை அனைத்தையும் உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழு பரிசோதிக்கவுள்ளது. அத்ஹோடு, வூஹான் கடலுணவுச் சந்தையைப் பார்வையிட்டு ஹடயங்களைச் சேகரிக்கவும் இக் குழு தீர்மானித்துள்ளது. இச் சந்தை தற்போது மூடப்பட்டதுமல்லாது அங்குள்ள பல தடயங்களைச் சீன அரசு அழித்துவிட்டது எனவும் கூறப்படுகிறது. வூஹான் ஆய்வுகூடமொன்றிலிருந்து இவ் வைரஸ் தற்செயலாகப் பரவியிருந்தது என்ற சந்தேகம் வலுபெற்றுவரும் நிலையில், இந் நிபுணர் குழுவுடன் எந்த அளவுக்குச் சீன அரசு ஒத்துழைக்கும் என்பது கேள்விக்குறியே.



கோவி பெருந்தொற்று ஆரம்பமான காலத்திலிருந்தே வூஹானில் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான அனுமதியைக் கோரி உலக சுகாதார நிறுவனம் சீன அரசுடன் போராடிக்கொண்டு வந்தது. இது தொடர்பாக சீனாவுக்குச் சென்ற நிபுணர்கள் குழுவை விசா நடைமுறைகளைக் காரணம் காட்டி, சீனா இதற்கு முன்னர் திருப்பியனுப்பியிருந்தது.

தற்போதய குழுவில் பிரித்தானிய விலங்கியல் நிபுணரான பீட்டர் டாஸாக்கும் ஒருவராவார். கொறோணாவைரஸ் மனிதரால் உருவாக்கப்பட்டதெனவும், அது வூஹான் வைரசியல் நிறுவன ஆய்வுகூடத்திலிருந்து ஆரம்பமானது எனவும் கூறப்படும் கருத்துக்களுக்கு எதிராகக் காட்டமான விமர்சனமொன்றை கார்டியன் பத்திரிகையில் பீட்டர் டாசாக் எழுதியிருந்தவர். அதே வேளை ‘ஈக்கோ ஹெல்த் அலையன்ஸ்’ (Eco Health Alliance) எனப்படும் தொற்று வியாதிகள் பற்றிய ஆரய்ச்சியில் ஈடுபடும் ஒரு தொண்டு நிறுவனத்தின் தலைவராக இருக்கும் இவர் சந்தேகத்துரிய வூஹான் ஆய்வுகூடத்தில் முன்னர் பணியாற்றியவர்.

தொற்றுக் காலத்தில் 76 நாட்களுக்கு, வூஹான் நகரின் 11 மில்லியன் மக்கள் மிகவும் இறுக்கமான நடமாட்டக் கட்டுப்பாட்டுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார்கள்.

உலகம் முழுவதும் கோவிட் தொற்றினால் இறந்த மக்களின் தொகை 2 மில்லியன்களுக்கு மேலாக இருக்கிறது.