HealthIndia

“கோவிட் தொற்று ஏற்பட்டுக் குணமடைந்து வருகிறேன்” – நடிகர் சூர்யா


நடிகர் சூர்யாவுக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுத் தற்போது குணமடைந்துள்ளதாகவும் இன்னும் பழைய நிலைக்குப் பூரணமாகத் திரும்பவில்லை எனவும், மக்களைக் கவனமாகவும் பாதுகாப்பாகவும் இரும்மும்ற்றும் கேட்டு, இன்று (ஞாயிறு 07) தனது ருவீட் செய்தி மூலம் தெரிவித்துள்ளார்.

“நான் கோவிட் தொற்றுக்குள்ளாகித் தற்போது குணமடைந்துவிட்டேன். எமது வாழ்வு முற்றாகப் பழைய நிலைக்குத் திரும்பவில்லை என்பதை நாம் உணரவேண்டும். அதற்காக பயத்தில் நாம் நம்மை வீட்டிற்குள் முடக்கிக்கொள்ளவேண்டுமென்பதில்லை. அதே வேளை நாம் எல்லோரும் மிகவும் அவதானமாகவும், பாதுகாப்ப்பாகவும் இருக்க வேண்டும். அர்ப்பணிப்பான மருத்துவர்கள் எமக்கு அருகில் இருந்து கவனிப்பதையிட்டு நான் எனது அனபையும் நன்றியையும் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்” என அவர் தனது செய்தியில் தெரிவித்துள்ளார்.

சூரரைப் போற்று பவம் வெளியானபோது அவரது துணை நடிகை அபர்ணா பாலமுரளியோடு காணப்பட்டதற்குப் பின்னர் அவர் வெளியில் புறப்படவில்லை எனப்படுகிறது.

தமிழ்நாட்டில் 841,797 கோவிட் தொற்றுக்களும் 12,383 மரணங்களும் இதுவரை ஏற்பட்டுள்ளன.