கோவிட் தொற்று அதிகமுள்ள பகுதிகள் – ரொறோண்டோ நகரசபையின் பட்டியல்
சிறுபான்மை இனத்தவர்களும், வருமானம் குறைந்தவர்களுமே அதிகம் பாதிக்கப்பட்டவர்கள்
ரொறோண்டோ மாநகரத்தில் அதிகம் கோவிட் தொற்றுக் கண்ட பகுதிகளை நகரசபை பட்டியலிட்டிருக்கிறது. இதன்படி சில சமூகங்கள் ஒப்பீட்டளவில் அதிக தொற்றுடையவாகக் காணப்படுகின்றன.
கடந்த அக்டோபர் 4ம் திகதி வரை பெறப்பட்ட தரவுகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இப் பட்டியலில் நோய்ப் பரிசோதனை செய்யப்பட்ட ஒவ்வொரு 100 பேரிலும் எத்தனை பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடப்படுகிறது. ரொறோண்டோ பொதுச் சுகாதாரத் திணைக்களத்தின் கணிப்பின்படி, 3% த்துக்கும் அதிகமாக இருந்தால் தொற்று தீவிரம் எனக்கூறப்படுகிறது. ரொறோண்டோ நகரசபையின் சராசை தொற்று வீதம் 3.1% ஆகும்.
அந்த வகையில், சில பிரதேசங்களைத் தீவிரத் தொற்றுள்ளவையாக நகரசபை பட்டியலிட்டுள்ளது. இப் பிரதேசங்களில் வாழ்பவர்களும், அவற்றுக்குச் செல்பவர்களும் அவதானமாக இருக்கும்படியும், தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படியும் ரொறோண்டோ வாழும் மக்களுக்கு நகரசபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அப்படியான சில பிரதேசங்கள்:
| பிரதேசம் | தொற்று விகிதாசாரம் |
| West Humber-Clairville | 7.9% |
| Black Creek | 10.8% |
| Mount Olive-Silverstone-Jamestown | 7.7% |
| Humbermede | 9.6% |
| Glenfield-Jane Heights | 8.8% |
| Kingsview Village-The Westway | 7.4% |
| Elms-Old Rexdale | 8.6% |
| Brookhaven-Amesbury | 12% |
ரொறோண்டோ நகரசபைக்குள் காணப்படும் நோய்த் தொற்றுக்களில் 35% த்துக்கு மேற்பட்டவை ஆகஸ்ட் 1 ம் திகதிக்குப் பிந்தியவை எனவும் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் வருமானம் குறைந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் இனத்தினால் சிறுபான்மையினருமாக இருக்கிறது என ரொறோண்டோ மருத்துவ அதிகாரி டாக்டர் டெவில்லா தெரிவித்துள்ளார்.
பாடசாலைகள் திறக்கப்பட்டதால் தொற்றுக்கள் அதிகம் நேரவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
