IndiaNews & Analysis

கோவிட் இரண்டாவது அலைக்கு தேர்தல் ஆணையமே காரணம் – சென்னை உயர்நீதிமன்றம்

கோவிட் இரண்டாவது அலைக்கு தேர்தல் ஆணையமே காரணம் - சென்னை உயர்நீதிமன்றம்

மே 2 இல் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்கள், ஊர்வலங்களுக்குத் தடை

இரண்டாவது கோவிட் அலைக்கு, தேர்தல் ஆணையமே காரணம் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து வெளியிட்டமையைத் தொடர்ந்து, மே 2 இல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்போது வெற்றிக் கொண்டாட்டங்களையோ அல்லது ஊர்வலங்களையோ நடத்தக் கூடாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இக் கட்டுப்பாட்டை, சகல மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களினதும் முதன்மை தேர்தல் அதிகாரிகள் மே 2 முதல் நடைமுறைப்படுத்த வேண்டுமென தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அத்தோடு தேர்தல் வெற்றிப் பத்திரத்தைப் பெற, வெற்றியீட்டிய பிரதிநிதியோடு கூடச் செல்வதற்கு இரண்டு பேருக்கு மேல் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் அது கட்டளை பிறப்பித்துள்ளது.

கோவிட் தொற்றுக் காலத்தில் தேர்தல்களை நடத்துவது தொடர்பாக கடந்த வருடம் ஆகஸ்ட் 21 இல் வழிகாட்டி ஒன்றைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது. தேசிய, மாநில அரசியல் கட்சிகளுடன் ஆலோசித்த பின்னரே தாம் இவ்வழிகாட்டியை வெளியிட்டிருந்ததாக தேர்தல ஆணையம் மேலும் தெரிவித்துள்ளது.

தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலுக்கமையை, தேற்தல் ஆணையம் தனது கட்டுப்பாடுகளை மிகவும் இறுக்கி வருகிறது. இன்று அதனால் வெளியிடப்பட்ட புதிய அறிக்கையில் பல கட்டுப்பாடுகளை நிர்வகிக்கும் பொறுப்பை அது மாநில தேர்தல் அதிகாரிகளிடம் கொடுத்திருக்கிறது.