ArticlesColumnsசிவதாசன்

கோயிம்

இந்த உலகில் இரண்டே இரண்டு கருத்துக்களே இருக்க முடியும். ஒன்று எங்களுடையது மற்றது யூதர்களல்லாதவர்களுடையது (கோயிம்).

“…கெட்ட இயல்புணர்ச்சியுள்ள (instinct) மக்கள் நல்லவர்களைவிட அதிகமாகக் காணப்படுவார்கள். இப்படியானவர்களைக் கருத்துப் பரிமாற்றத்தினால் ஆட்சி செய்துவிட முடியாது. மாறாக வன்முறையினாலும் பயங்கரவாதத்தினாலும் மட்டுமே அது சாத்தியமாகும். ஒவ்வொரு மனிதனும் அதிகாரத்துக்கு ஆசைப்படுபவன். ஒவ்வொரு மனிதனும் இயலுமானால் சர்வாதிகாரியாக உருவாவதையே விரும்புவான்….”

“…ஆரம்ப மனித சமூகத்தின் கட்டமைப்பில் மனிதன் கண்மூடித்தனமான மிருக பலத்தினால் கட்டி ஆளப்பட்டான். பின்னர் அதே மிருகபலமே இன்னொரு மாறாட்ட வடிவத்தில் சட்டம் ஒழுங்கு என்ற பெயரில் அவனைக் கட்டி ஆள்கிறது. இயற்கை விதிகளின்படி சரியானது எப்போதும் வலிமையின் பக்கமே சார்ந்து நிற்கிறது…”

அரசியலும் நேர்மையும் ஒன்றுக்கொன்று இணங்க முடியாதவை. நேர்மையோடு ஆட்சி செய்பவன் ஒருபோதும் சாதுரியமான அரசியல்வாதியாக இருக்கவே முடியாது. தந்திரமுடைவனும், ஏனையோரை நம்ப வைக்கக் கூடியவனுமானவனே ஆள்வதற்குக் தகுதியானவன். நேர்மை, உண்மை பேசுதல் எல்லாம் அரசியலில் கெட்ட வார்த்தைகள்

மேலே வாசித்தவை இன்றய உலகை அச்சொட்டாக வரைவு செய்வதுபோலத் தோற்றமளித்தாலும் சிலரது கூற்றுப்படி இப்பந்திகள் எழுதப்பட்ட காலம் 1897 எனப்படுகிறது. எதிர்கால உலக ஏகாதிபத்தியத்துக்கான திட்டமிடுதலின் பிரகாரம் எழுதப்பட்ட வக்கணைத் தொகுதியின் (Protocols) முதலாவது அத்தியாயத்தின் சில பகுதிகள் இவை.யூத தாயக இயக்கத்தின் மூத்தவர்களினால் உருவாக்கப்பட்டதாகக் கருதப்படும் இந்த வக்கணைத் தொகுதி நூறாண்டுகளுக்குப் பின்னர் உலக அரங்கில் அதி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுப் பேசப்படுகிறது.

“இந்த உலகில் இரண்டே இரண்டு கருத்துக்களே இருக்க முடியும். ஒன்று எங்களுடையது மற்றது யூதர்களல்லாதவர்களுடையது (GOYIM).” என்பதோடு ஆரம்பிக்கும் இந்த வக்கணைத் (Protocols) தொகுதி முன்வைக்கின்ற கோட்பாடுகள் கடந்த, சமகால உலக நடைமுறைகளை உன்னிப்பாக அவதானிப்பவர்களுக்கு உண்மையானதாகவே படும். இதன் நீட்சியாக எதிர்காலத்தைப் பார்ப்பவர்களுக்கு ஒருவித அச்சம் ஏற்படுவது தவிர்க்கமுடியாததாகிவிடுகிறது.

*****

சோவியத் கூட்டாட்சியின் உடைவிற்குப் பின்னர் உலகெங்கும், குறிப்பாக ஐரோப்பிய சமூகத்தில் யூத எதிர்ப்பு பலத்த கோஷங்களோடு திரண்டு வருகிறது. கடந்த சில மாதங்களில் ஐரோப்பாவில் (உலகிலேயே என்றுகூடச் சொல்லலாம்?) அதிகம் விற்பனையாகும் புத்தகம் ஹிட்லரின் ‘த மெயின் காம்ப்வ்’. இரண்டு விடயங்களுக்கும் இலகுவாக முடிச்சுப் போட்டுவிடலாம்.

சமீபத்தில் சேர்பியன் நண்பரொருவருடன் பேசிக்கொண்டிருந்தபோது அவரது சந்தேகம் என்னையும் மாசுபடுத்தியதன் விளைவே இந்தக் கட்டுரை.

உலகெங்கும் சர்வாதிகாரிகளை ஒழித்து மக்களாட்சிகளை, அது பொருள் முதல்வாத அல்லது சமதர்ம சமுதாய ஆட்சிமுறைகள் எதுவாகவும் இருக்கலாம், உருவாக்குவதில் முன்னின்றுழைத்ததில் யூத சமுதயாத்தினருக்குப் பெரும் பங்குண்டு. அத்துடன் கலை, இலக்கியம், தத்துவம், இசை, விஞ்ஞானம், அரசியல், பொருளாதாரம், ஊடகம் என்று சகல துறைகளிலும் முன்னோடிகளாகத் திகழும் அச்சமுதாயம் தாங்கள் ‘கடவுளாற் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள்’ என்று சொல்லும்போது அது பிழையென்பதற்கு நடைமுறை உதாரணங்கள் அரிதென்பதைப் பலரும் ஏற்றுக்கொள்கிறார்கள். அச்சமுதாயத்தினால் மட்டுமே உலக மக்களை வழிநடத்த முடியும் என்று அவர்கள் கொண்டிருக்கும் ஆழ்ந்த நம்பிக்கையின் பிரகாரம் அதைச் செயன்முறைப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறார்களா என்பதுவே எனது சேர்பிய நண்பரின் சந்தேகம்.இத்தனைக்கும் அவர் ஒரு யூத எதிர்ப்புவாதி என்று சொல்ல முடியாது. அவரது மனைவியின் தந்தை ஹிட்லரினால் பாதிக்கப்பட்ட ஒரு யூதர். அச் சேர்பிய நண்பர் முன்னாள் யுகோஸ்லாவிய அதிபர் மார்ஷல் டிட்டோவின் பரம விசிறி. அவர் உண்மையில் ஒரு குறோவேஷியர். குறோவேஷிய தேசிய வெறியினால் புறக்கணிக்கப்பட்ட சோஷலிசவாதி. நீர்மூழ்கித் தொழில்நுட்ப விஞ்ஞானி. பரந்த மன்பான்மை கொண்டவர். அப்டியானவரது மனத்தில் எழுந்த சந்தேகங்கள் என்னையும் பாதித்ததில் வியப்பில்லை.

அவரது பல கேள்விகளில் முக்கியமானவை சில. மார்ஷல் டிட்டோ ஒரு யூகொஸ்லாவியர் அல்ல. அவரது பூர்வீகம் பற்றி எதுவுமே அறியப்படவில்லை. அவர் ஒரு யூதராகவிருக்கலாம் என்பது பரலது சந்தேகம்.

லெனின் தனது கலாச்சாரப் புரட்சியை வெற்றிகரமாகக் கொண்டு நடாத்துவதற்கு நிறையப் பணம் தேவைப்பட்டது. ரஷ்யாவின் அரச ஆட்சியை வீழ்த்துவதற்கான பணத்தை அவர் லண்டனிலிருந்து கொண்டு போனதாகக் கருதப்படுகிறது. அவ்வளவு தொகையான பணத்தை அவர் எங்கிருந்து பெற்றுக் கொண்டார்?

கார்ல் மார்க்ஸ் ஒரு யூதர். அவரது நூலில் ‘மூல தனம்’ என்ற அத்தியாயத்தை எடுத்துவிட்டுப் பார்ப்பின் அது கத்தோலிக்க திருநூலின் அம்சங்களை ஒத்திருக்கிறது என்று சிலர் வாதிக்கிறார்கள்.

இரண்டாம் உலக யுத்தத்தின்போது 23 மில்லியன் ரஷ்யர்கள் இறந்தார்கள். ஆரம்பத்தில் ரஷ்யா மீது படையெடுக்கும் உத்தேசம் ஹிட்லருக்கு இருக்கவில்லை என்றும், ஹிட்லர் உருவாக்கிய கொலைக் களங்கள் உண்மையில் யூதர்களைக் கொல்லவென உருவாக்கப்படவில்லை என்றும் இவற்றில் ஆரம்பத்தில் கொல்லப்பட்டவர்கள் ஜெர்மானியர்கள்தான் வசதிகள் இருந்தபடியால் சாதகமாக அவை பயன்படுத்தப்பட்டன என்றும் சொல்லப்படுகிறது. ஆரம்பத்தில் அமெரிக்கா இவ் யுத்தத்தில் பங்கேற்பதாக உத்தேசித்திருக்கவில்லை என்றும் யூதர்களுக்கான தேச உருவாக்கத்தின்போது அமெரிக்க யூதர்களின் அழுத்தத்தின் பேரில் அமெரிக்கா இப்போரில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டது அதனால் ஏற்பட்ட கோபமே ஹிட்லர் யூதர் மீது தன் கொலைவெறியைத் திருப்பிவிட நேரிட்டது என்கிறார்கள்.ஒஸ்ட்றோ – ஹங்கேரியன் போரைத் தொடர்ந்து அரசாட்சி ஒழிக்கப்பட்டதும், ரஷ்ய சாரின் ஆட்சி ஒழிக்கப்பட்டதும், எகிப்திய சாம்ராச்சியம் ஒழிக்கப்பட்டதும், ஹிட்லரின் சர்வாதிகாரம் ஒழிக்கப்பட்டதும், சமீப நிகழ்வுகளான சோவியத் யூனியனின் உடைப்பு முதல் ஈராக் அதிபர் சதாம் உசேனின் சர்வாதிகார ஒழிப்பு என்று சகல அதிகார வர்க்கங்களினது முடிவுகளின் பின்னணியில் யூதர்களின் கரங்கள் இருக்கிறது என்பதே என் சேர்பிய நண்பரின் விவாதப் பொருள்.

இப்படியான பல வரலாற்று நிகழ்வுகளைப் பார்க்கும்போது உலகின் பல அதிகாரக் கட்டுமானங்களை உடைப்பதில் யூதர்களின் பங்கு இருந்திருக்கலாமென்பதை 1897 இல் யூத இயக்கத்தினால் உருவாக்கப்பட்ட மேற் சொன்ன வக்கணைத் தொகுதியில் குறிக்கப்பட்ட விடயங்கள் நிரூபிப்பது போல அமைகின்றன.

அத்தோடு உலகில் பல நுற்றாண்டுகளாக இயங்கிவரும் பல இரகசிய இயக்கங்களிலொன்றான Freemasons என்பதற்கும் இந்த மூத்த யூத இயக்கத்துக்குமிடையேயான தொடர்புகள் பற்றி 1905 ம் ஆண்டிலேயே சேர்ஜி அலெக்சான்ட்ரோவிச் நைலஸ் என்பவர் தனது ‘The Great in the Small: Antichrist Considered as an imminent political possibility’ என்ற சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார். 1901 ம் ஆண்டு மூத்த யூதர்களால் எழுதப்பட்டதாகக் கருதப்படும் வக்கணைத் தொகுதி தனக்குக் கிடைக்கப்பெற்றதாக நைலஸ் கூறுகிறார். இத் தொகுதி யூதர்களால் எழுதப்படவில்லை என்றும் அது நாஜிகளின் வேலை என்றும் சமகால யூதர்கள் வாதிக்கிறார்கள்.தற்போது பலருக்கும் வாசிக்கக் கிடைத்திருக்கும் இந்நூல் மாற்றப்பட்ட வடிவமெனவும் உண்மையான பிரதி; ஒன்றே ஒன்றுதான் அதுவும் பிரித்தானிய அரும்பொருட் காப்பகத்தில் வைக்கப்பட்டிருக்கிறதென்றும் சொல்லப்படுகிறது. கடந்த இரு தசாப்தங்களில் இந்நூலின் முக்கியத்துவம் பற்றி இஸ்லாமிய தேசங்களில் பேசப்படுகிறது. அத்தோடு ஐரோப்பிய தேசங்களில் ஹிட்லரது ‘த மெயின் காம்ப்வ்’ நூலிற்கு ஏற்பட்டுள்ள மவுசு யூதர்களுக்கு எதிரான உலகளாவிய எதிர்ப்பலைகளுக்குக் காரணம் கற்பிக்கிறது.

90களின் பிற்பகுதிகளில் அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்ட ‘The New Century America’ என்ற இயக்கத்தின் பின்னணியில் பல அமெரிக்க யூதர்கள் (பெரும்பான்மை) இருக்கிறார்கள். சோவியத் கூட்டாட்சியின் உடைவிற்குப் பின் உலகை ஆளும் பலம் அமெரிக்காவிற்கு மட்டுமே இருக்கிறது. ஆனால் அந்த அமெரிக்கா யூத இயக்கத்தின் ஒரு கருவியென்பதே எனது நண்பரின் சந்தேகம்.

இதுவரை காலமும் இந்த யூத இயக்கத்தின் பரம எதிரியாக நிழலுருவத்தில் இயங்கிவருவது கத்தோலிக்க திருச்சபையே. அதை உடைத்து அழித்தொழிப்பதுவும் இந்த இயக்கத்தின் ஒரு நோக்கம் என்பதுவும் பரவலான ஒரு கருத்து. பாப்பரசர் இரண்டாவது அருளப்பர் சின்னப்பர் திருச்சபைக்குத் தலைமைதாங்கும் வரைக்கும் யூதர்கள் ஹிட்லரின் கொலைவெறியாற் பாதிக்கப்பட்டதற்கு திருச்சபை எதுவித எதிர்க்குரலும் கொடுக்காது வாளாவிருந்தது பற்றி அவர்களது விசனமும் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதே. உலக அரங்கில் யூதர்களின் பலம் அதிகம் ஓங்கி வந்துகொண்டிருப்பதாகவும் அதைச் சமாளிக்க வல்ல பலத்தை வத்திக்கன் அரசு மட்டுமே கொண்டிருப்பதாகவும், தற்போதய கடுமையான போக்குடைய பாப்பரசரின் தேர்வு இப்பின்னணிலேயே நடைபெற்றது எனவும் ஒரு ஐதீகம் நிலவுகிறது.

இருப்பினும் யூத இயக்கத்தின் மேற்சொன்ன வக்கணைத் தொகுதியில் குறிப்பிடப்பட்ட பல அம்சங்களில் ஒன்றான ‘சமூகங்களை மிதவாதப் படுத்துதல்’ என்பதுதான் பல பழமைவாத சமூகங்களுக்கு எரிச்சலைக் கொடுத்து வருகிறது. கார்ல் மார்க்ஸ் இனுடைய மாக்ஸீய தத்துவம் சமூகக் கட்டுடைப்பின் நோக்கத்திற்காகவே எழுதப்பட்டதென்பது பலரது வாதம். லெனின் ரஸ்யப் புரட்சிக்காகக் கருக்கொண்டது இங்கிலாந்தில் என்றும் அதற்கான பெருந்தொகையான பணத்தை முதலீடு செய்தது இந்த மூத்த யூத இயக்கமென்றும் எதிர் முகாம்கள் குற்றம் சாட்டுகின்றன.கடந்த இரண்டு மூன்று தசாப்தங்களாக உலகெங்கும் மிதவாதப் போக்குகள் தலைகாட்டுவது எழுந்தமானமான நிகழ்வுகளோ அல்லது விபத்துக்களோ அல்ல. ஒருபாற்சேர்க்கை, விவாகங்கள், மதங்கள் உடைபட்டு பல்லாயிரக் கணக்கான மதக்குழுக்களின் ஆரம்பம், கலாச்சாரச் சீரழிவுகள், ஊடகங்களின் மிதவாதப் போக்குகள் என்று பல வழிகளிலும் இறுக்கமான சமூகக்கட்டுமானங்களைத் தகர்த்தெறியும் போக்குகள் சமீப காலமாக அதிகரித்து வருவதற்கு யூத சமூகங்களே காரணமென்ற குற்றச்சாட்டுகள் தீவிர வலதுசாரிகளால் முன்வைக்கப்படுகிறது.

இவையெல்லாம் பொய்யான பரப்புரைகள் என்று விவாதித்தாலும் துரதிர்ஷ்டவசமாக யூத மூத்த இயக்கத்தின் வக்கணைத் தொகுதியில் குறிப்பிட்ட அம்சங்கள் வரிக்கு வரி இன்றய நடைமுறைகளைப் பிரதிபலிப்பதாக இருக்கின்றனவே என்பதுதான் எனது நண்பரின் சந்தேகம். நானும் அவர்களது ‘கோயிம்’ ரகத்துக்குள் சேர்க்கப்படுவதால் என் நண்பரது சந்தேகம் என்னையும்; தொற்றிக் கொள்வதையும் தவிர்க்க இயலாமலிருக்கிறது.

**பல ஊகங்கள் மீது உருவாக்கப்பட்டது இக்கட்டுரை. வெறும் வாசிப்புக்காக மட்டுமே. ஒரு குறிக்கப்பட்ட சமூகத்தின்மீது அவதூறு செய்வது எனது நோக்கமல்ல. திறந்த மனதுடன் இக்கட்டுரையை உள்வாங்கிக் கொள்ளவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.- சிவதாசன்

இக் கட்டுரை மே 16, 2005 ‘காலம்’ சஞ்சிகையில் பிரசுரமானது