Spread the love

ஜனவரி 16, 2020

கோத்தாபய யாழ்ப்பாணத்திற்குச் செல்லவுள்ளார் 1
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச

வடமாகாண மக்கள் எதிர்கொள்ளும் பிரச்ச்சினைகளை நேரடியாக அறிந்துகொள்வதற்காக, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச இம் மாதம் யாழ்ப்பாணம் செல்லவுள்ளதாக நேற்று (ஜனவரி 15) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில், மின்வலு ராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே தெரிவித்தார்.


வடமாகாணம், மற்றும் மலையக மக்களின் பிரச்சனைகளை நேரடியாகப் பார்த்து அவர்களுக்கான தேவைகளை நிறைவேற்றுவதே ஜனாதிபதியின் நோக்கம் எனவும், இதன் பிரகாரம் எதிர்வரும் மார்ச் 1 ம் திகதியிலிருந்து தோட்டத் தொழிலாளர்களின் நாட் சம்பளத்தை ஆயிரம் ரூபாய்களாக அதிகரிக்க அவர் உத்தரவிட்டுள்ளார் என்றும், அவர் பதவியேற்று 56 நாட்களில் அவர் கொடுத்திருந்த வாக்குறுதியை நிறைவேற்றியது மகிழ்ச்சிக்குரியது எனவும் அமைச்சர் அழுத்தகமே தெரிவித்தார்.

கடந்த ஆட்சியின்போது, ஊழல்களில் பலர் ஈடுபட்டமை , அரசாங்கம் நிதிமன்றங்கள் மீது தேவையற்ற அழுத்தங்களைபி பிரயோகித்திருந்தமை போன்ற விடயங்கள் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன என்றும் ஊழலில் ஈடுபடடவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தவிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email
Related:  அம்பாந்தோட்டை துறைமுகம் எமது கட்டுப்பாட்டில் இல்லை - அரசாங்கம் வருத்தம்
கோத்தாபய யாழ்ப்பாணத்திற்குச் செல்லவுள்ளார்
Gotabaya Rajapaksa is chosen to represent SLPP as the candidate in the upcoming Presidential elections

கோத்தாபய யாழ்ப்பாணத்திற்குச் செல்லவுள்ளார்