கோத்தாபயவின் வெற்றியில் சிறுபான்மை இன மக்களின் பங்களிப்பு

Spread the love
உருத்திரன்

சிறுபான்மையினரின் ஆதரவு குறைவுதான் ஆனால் அவர்களின் ஆதரவு இல்லாமல்திரு. கோத்தபாய இராஜபக்‌ஷ அவர்களால் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று இருக்க முடியாது ……..

எப்படி ? இதோ தரவுகளுடன் …..அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு இது எல்லாம் புரியும் எனவே அளவுக்கு அதிகமாக பயப்பட வேண்டாம்…..

தற்போதைய தேவை, இலங்கையில் உள்ள சிறுபான்மை மக்கள், தாம் இலங்கையர் என்ற உணர்வுடன், சம உரிமைகளுடன் தமது இருப்பை இலங்கையில் காப்பாற்றி கொள்ள எவ்வகையான வியூகங்களை வகுக்க வேண்டும் என்பதே …..

ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன், இலங்கையில் சிறுபான்மையினரின் இருப்பு என்பது இராஜபக்‌ஷ குடும்பத்தின் கருணையில் தங்கியிருக்கின்றது என …அப்படி நான் குறிப்பிட்டது தேர்தல் முடிவுகளை அடுத்து ஏற்பட்ட வேதனையின் வெளிப்பாடு …….

ஏனெனில், தேர்தல் முடிவுகளை அடுத்து இலங்கையின் அரசியல் சமன்பாடு மாற்றியமைக்கப்பட்டு விட்டது. சிறுபான்மை மக்களை பொறுத்தவரை கரணம் தப்பினால் மரணம் எனும் நிலை, அரசியல் அனாதைகள் போன்றதோர் நிலை ….

எமது உரிமைகள் பற்றியும் பேசியாக வேண்டும் அதே சமயம் அந்த பேச்சுக்கள் எமது இருப்பை இல்லாமல் செய்து விடாத வகையில் கவனத்துடன் வடிவமக்கப்பட்டதாகவும் இருக்க வேண்டும் ….

சரி எப்படி திரு. கோத்தபாய இராஜபக்‌ஷ அவர்கள் சிறுபான்மையினரின் ஆதரவுடனும்தான் வெற்றி பெற்றார் என்று பார்ப்போம் …..

சிறுபான்மை இன மக்கள் கோத்தாபயவின் வெற்றியில் என்ன பங்களிப்புச் செய்தனர்?
 • கல்முனை – 7,286
 • சம்மாந்துறை – 7,151
 • அக்கறைப்பற்று – 20,116
 • மட்டக்களப்பு – 38,460
 • மூதூர் – 4,925,
 • திருகோணமலை – 12,818 
 • யாழ்பாணம் – 23,261
 • வன்னி – 26,105
 • வேருவலை – 20,000
 • நுவரெலிய – 60,000
 • அக்குரனை – 15,000 

மொத்தம் 235,122 எளிதாக பிரித்தரியக்கூடிய சிறுபான்மை இன வாக்குகள் கோத்தாவுக்கு கிடைத்துள்ளன. 

இது தவிர, பிரித்து பார்க்க முடியாத ஆங்காங்கே உள்ள கோத்தாபய ஆதரவாளர்களான சிறுபான்மை இன மக்களின் அளிக்கப்பட்ட வாக்குகள் 264,878 என கருதினால்…

4 மில்லியன் அளிக்கப்பட்ட சிறுபான்மை இன வாக்குகளில் அரை மில்லியன் வாக்குகளை கோத்தாபய பெற்றுள்ளார்.

கோத்தாப்பய அரைமில்லியன் சிறுபான்மை இன மக்களின் வாக்குகளை பெற்றிருக்காவிட்டால்……. 6,424,255 வாக்குகளை மட்டும் பெற்று, அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 48% வாக்குகளை மட்டுமே பெற்றிருப்பார்.

ஆக, கோத்தாப்பயவை முதல் சுற்றிலேயே வெற்றி பெற வைத்து, அவரை வெற்றி வாகை சூடவைத்தது….. தேசமெங்கும் பரவி இருந்தும் அவருக்கு வாக்களித்த அந்த அரைமில்லியன் சிறுபான்மை இன மக்களின் வாக்குகளே…!

Related:  தெல்லிப்பழை மஹாஜன கல்லூரியின் ஓய்வு பெற்ற கணித ஆசிரியர் த.பூ.முருகையா காலமானார்

நேரடியாக பிரித்தறியக்கூடிய மேலே சுட்டிக்காட்டப்பட்ட பிரதேசங்களில் இருந்து 235,122 வாக்குகள் கிடைக்காமல் விட்டிருந்தாலும் கோத்தாபயவால் 49.99% வாக்குகளை மட்டுமே பெற்றிருப்பார் .

யாழ்ப்பாணத்தைத் தளமாகக் கொண்ட உருத்திரன், சமூகம், அரசியல், மதம் போன்ற விவகாரங்களில் இலங்கையில் வெளிவரும் பத்திரிகைகளுக்கு எழுதி வரும் சுயாதீன பங்களிப்பாளர். இலங்கையில் சாதிப் பிரச்சினைகள் குறித்து இவர் எழுதிய சிறுகதை 2012 க்கான சாஹித்திய விருதைப் பெற்றது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

>/center>