கோதுமை விலை உயர்வு: இந்த வருடம் உலகத்தில் பஞ்சம் ஏற்படலாம்
இந்தியா, ரஷ்யா, கசாக்ஸ்தான் கோதுமை ஏற்றுமதியைத் தடை செய்தன
யூக்கிரெய்ன் போரின் விளைவுகளில் ஒன்றாக உலகம் முழுவதும் பஞ்சம் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் தென்படுவதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த வருடத்தில் மட்டும் கோதுமையின் விலை 60 வீதத்தால் உயர்ந்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணமாக ரஷ்ய-யூக்கிரெய்ன் இருப்பினும் அமெரிக்காவின் பொருளாதாரக் கொள்கையும் இன்னுமொரு முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த வேளையில் உலகின் முக்கிய கோதுமை ஏற்றுமதி நாடுகளான ரஷ்யா, கசாக்ஸ்தான், இந்தியா போன்ற நாடுகள் தமது சொந்த மக்களின் தேவைகளைக் காரணமாகக் காட்டி கோதுமை ஏற்றுமதியை நிறுத்தி வைத்துள்ளன. இதந் காரணமாக இந்த வருடம் ஆகஸ்ட் மாதமளவில் உலகரீதியான பஞ்சம் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் தென்படுவதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

2020 வரை உலகில் கோதுமையின் விலை ஸ்திரமாக இருந்துவந்தது. ஆனால் கோவிட் பெருந்தொற்றின் காரணமாக அமெரிக்கா எடுத்த நடவடிக்கைகளில் ஒன்று பெருந்தொகையான நாணயத்தை அச்சடித்துப் புழக்கத்துக்கு விட்டமை. இதன் காரணமாக ஏற்பட்ட பணவீக்கத்தைத் தொடர்ந்து பண்டங்களின் விலை திடீர் அதிகரிப்புக்குள்ளாக நேரிட்டது.
யூக்கிரெய்ன் போர் இப் பிரச்சினையை மேலும் மோசமாக்கியிருக்கிறது. ரஷ்யாவும் யூக்கிரெய்னும் சேர்ந்து உலக கோதுமை உற்பத்தியின் மூன்றிலொரு பங்குக்குப் பொறுப்பாகின்றன. மீதி இந்தியா, கசாக்ஸ்தான், அமெரிக்கா போன்ற நாடுகளால் உற்பத்தி செய்யப்படுகின்றன.
யூக்கிரெய்ன் போரின் விளைவாக அமெரிக்காவும் நேச நாடுகளும் ரஷ்யா மீது விதித்த பொருளாதாரத் தடைகள் காரணமாக ரஷ்ய ஏற்றுமதிகள் தடைப்பட்டுவிட்டன. மீதியிருந்த யூக்கிரெய்ன் கோதுமை ஏற்றுமதி முழுவதையும் அமெரிக்கா தனக்கே தரவேண்டுமென்று வலியுறுத்தி வருகிறது. வழக்கமாக அமெரிக்காவின் கோதுமைத் தேவையை இந்தியாவே பூர்த்தி செய்து வந்தது. யூக்கிரெய்னின் ஏற்றுமதி பொதுவாக ஐரோப்பிய நாடுகளின் தேவையச் சமாளித்து வந்தது. கோதுமை ஏற்றுமதியை இந்தியா தடை செய்தவுடன் அமெரிக்கா இந்தியாவின் தடையைத் தளர்த்துமாறு கேட்டுக்கொண்ட போதும் இந்தியா தனது மக்களின் தேவையை முன்னிட்டு அமெரிக்காவின் கோரிக்கைக்கு மறுத்துவிட்டது. இதனால் தற்போது அமெரிக்கா யூக்கிரெய்ன் இருப்பில் உள்ள கோதுமைக்கு கட்டுப்பாடு விதித்துள்ளது. இந்த நிலையில் கோதுமை விலை 60% த்தால் அதிகரித்தயு மட்டுமல்லாது அது உலகில் கடும் பஞ்சத்தைத் தோற்றுவிக்கக் காரணமாக அமையவும் போகிறது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்தியாவின் கோதுமை ஏற்றுமதித் தடையை நீக்கும்படி ஐ.நா. சபை கேட்டுல்ளது. அதே வேளை எதிர்வரும் ஜூன் மாதம் ஜேர்மனியில் நடைபெறவிருக்கும் G7 நாடுகளின் மாநாட்டிற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் அழைக்கப்பட்டுள்ளதாகவும் கோதுமைத் தடையை மறுபரிசீலனை செய்யும்படி இந் நாடுகள் இந்தியாவை வற்புறுத்தலாமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.