கோதா வெற்றி பெற்றாலும் பதவி நீக்கப்படலாம் – உபுல் ஜயசூரியா,பி.சீ.

Spread the love
போலிப் பத்திரங்களைத் தவறுதலாக வெளியிட்ட சட்டத்தரணி!

நவம்பர் 11, 2019

பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அமெரிக்க குடிமகனல்ல என்பதற்குப் போதுமான ஆதாரங்கள் இல்லை என்வே அவர் வெற்றி பெற்றாலும் பதவியிலிருந்து நீக்கப்படலாம் என முன்னாள் பார் அசோசியேசன் தலைவரும்,வழக்கறிஞருமான விபுல் ஜயசூரியா, PC, கூறியுள்ளார்.

அமெரிக்கக் குடியுரிமையைத் துறந்ததாக கோதபாய கொடுத்திருக்கும் சான்றுகள் நம்பத்தகுந்தவையாக இல்லை. நியமனப் பத்திரம் தாக்குதல் செய்யப்படும்போது இப் பத்திரங்கள் தேர்தல் ஆணயத்துக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை என கோதபாயவின் சட்ட ஆலோசகர் அலி சாப்றி, PC, நேற்று பத்திரிகையாளர் மாநாட்டில் இது குறித்துப் பேசியதற்குப் பதிலளிக்குமுகமாகத் தெரிவித்தார்.

நேற்றய மாநாட்டில் அலி சாப்றி காட்டிய ரத்து செய்யப்பட்ட அமெரிக்க கடவுச் சீட்டு போலியானது என்பதற்கான அடையாளங்கள் இருந்தனவென்று திரு ஜயசூரியா மேலும் தெரிவித்தார். கோதபாய தேர்தலில் வெற்றிபெற்றாலும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவின் பதவி பறிக்கப்பட்டதுபோல, அவரது பதவியும் கலைக்கப்படலாம் என அவர் தெரிவித்தார்.


கோதபாயவின் அமெரிக்க குடியுரிமை பற்றி நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவரது சட்டத்தரணி தெரிவித்த கருத்துக்களுக்குப் பதிலளிக்குமுகமாக இன்று இன்னுமொரு சட்டத்தரணிகள் குழு வேறொரு பத்திரிகையாளர் மாநாட்டைக் கூட்டியிருந்தது. அதில் பேசும்போதே திரு ஜயசூரியா மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பிந்திய இணைப்பு

இச் சம்பவம் குறித்து தேர்தல் ஆணையத் தலைவர் மகிந்த தேசப்பிரிய கருத்துத் தெரிவிக்கையில், அமெரிக்க குடியுரிமை துறப்பு சம்பந்தமான பத்திரங்கள் எதுவும் நியமனப் பத்திரங்களுடன் இணைக்கப்பட்டிருக்கவில்லை எனக் கூறினார்.

இதற்குப் பதிலளிக்குமுகமாக கோதபாயவின் மூத்த சட்டத்தரணி அலி சாப்றி கோதபாய கையெழுத்திட்டதாகக் கூறப்படும் சத்தியக்கடதாசி ஒன்றை அவசரம் அவசரமாக முகநூலில் பதிவேற்றிவிட்டார். துரதிர்ஷ்டவசமாக அதில் சமாதான நீதவான் G.K.A.P.K. குலரத்தின மட்டுமே கையெழுத்திட்டிருந்தார், கோதபாயவின் கையெழுத்து இருக்கவில்லை.

தன் தவறை உணர்ந்த சட்டத்தரணி சாப்றி அப் பதிவை அழித்துவிட்டுப் பிறிதொன்றைப் பதிவேற்றியிருந்தார் (கீழே காணப்படுவது). இதில் முதலாவது பத்திரத்தில் 50 ரூபாய் முத்திரை ஒட்டி அதன் மீது கோதபாய கையெழுத்து வைத்திருப்பது தெரிகிறது.

ஏற்கெனவே பலத்த சந்தேகங்கள் சூழ்ந்த இப்பிரச்சினையை கோதபாயவின் சட்டத்தரணி மேலும் குழப்பத்துக்குள்ளாக்கியிருப்பது மட்டுமல்லாது, அவர்களால் கொடுக்கப்பட்ட பத்திரங்கள் போலியானவை எனக் கடந்த சில வாரங்களாகக் கூறப்பட்டுவரும் குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்கலாம எந்ற சந்தேகம் எழுந்துள்லது.

கோதபாய கையெழுத்து வைப்பதற்கு முன்னராகவே சமாதான நீதவான் கையெழுத்து வைத்திருப்பது சட்டத்திற்கு முரணானது, எனவே இப் பத்திரம் செல்லுபடியாகாது.

சூடுபிடித்திருக்கும் இவ்விவகாரம் கோதபாயவின் வெற்றியையும் தற்போது ஐயத்துக்குள்ளாக்கியிருக்கிறது.

Print Friendly, PDF & Email
Related:  மிருசுவில் படுகொலை சுனில் ரத்நாயக்காவுக்கு ஜனாதிபதி விசேட மன்னிப்பு
>/center>