Sri Lanka

கோதா இப்போது அமெரிக்கக் குடிமகனல்ல – நாமல்

நவம்பர் 10, 2019

கோதபாய ராஜபக்சவின் குடியுரிமை பற்றி மீண்டும் எழுந்துள்ள குழப்பம் தொடர்பாக நாமல் ராஜபக்ச தனது ருவீட்டரில் இன்று பதிலளித்துள்ளார்.

கோதாபாய, நாமல்

” பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தற்போது அமெரிக்கக் குடிமகனல்ல என்பதை அறுதியாகத் தெரிவித்த்உக் கொள்கிறோம்” எனக் கூறி கோதபாய குடியுரிமை துறந்ததற்கான ஆதாரமாக அதற்கான சான்றிதழையும் அவர் வெளியிட்டுள்ளார்.

“இனி ஐ.தே.கட்சி இன்னுமொரு சேற்று வீச்ச்சுக்கு நகரலாம்” என ஏளனப்படுத்தி நாமல் தனது ருவீட்டில் செய்தியனுப்பியுள்ளார்.

அமெரிக்க மத்திய பதிவுகள் அலுவலகத்தால் இன்று வெளியிடப்பட்ட மூன்றாவது பட்டியலிலும் கோதபாயவின் பெயர் காணப்படாததையடுத்து அமைச்சர் ஹரின் பெர்ணாண்டோ அவரின் அமெரிக்கக் குடியுரிமை பற்றி இன்று கேள்வி எழுப்பியிருந்தார். இதற்குப் பதிலளிக்கு முகமாகவே நாமல் இர் ருவீட்டை வெளியிட்டுள்ளார்.

நாமல் ராஜபக்ச இன்று வெளியிட்ட ருவீட்