Spread the love

நவம்பர் 15, 2019

தேர்தல் வாக்களிப்பு நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்னதாகவே கோதபாயவின் ஆட்சி ஆரம்பித்துவிட்டது. கோதபாயவை விமர்சித்து சென்ற வாரம் வெளியிடப்பட்ட நூலொன்றின் ஆசிரியர் கோதா ஆதரவாளர்களினால் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார் எனக் காவற்துறை தெரிவித்திருக்கிறது.

சென்ற வாரம் வெளியிடப்பட்ட “வீணடிக்கப்பட்ட அபிவிருத்தியும் ஊழலும்” (Wasteful Development and Corruption) என்னும் நூலின் ஆசிரியரான லசந்தா விஜேரட்ணவின் என்பவரின் காலியிலுள்ள அவரது வீட்டிற்குள் அத்து மீறிப் புகுந்த கோதாவின் ஆதரவாளர்கள் நான்கு பேர் அவரது கையில் கத்தியால் குத்தியாதாகவும் கைத் துப்பாக்கியொன்றை அவரது மனைவியின் தலையை நோக்கிப் பிடித்ததாகவும் விஜேரட்ணவின் வழக்கறிஞர் தாரகா நாணயக்கார தெரிவித்ததாக ஏ.எஃப்.பி. செய்தி ஸ்தாபனம் செய்தி வெளியிட்டுள்ளது. வெளியேறுவதற்கு முன் அவர்கள் தளபாடங்களையும் அடித்து நொருக்கினர் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவற்துறை இது தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்திருந்தாலும் இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை.

கோதபாய ராஜபக்சவின் வெற்றிக்கான சந்தர்ப்பத்தைக் குழப்புவதாக அவர்கள் விஜேரட்ணவைக் குற்றஞ்சாட்டிநரென் நாணயக்கார மேலும் தெரிவித்தாரெனத் தெரிகிறது. கோதபாயவிற்கும் சஜித்திற்குமிடையே கட்ம் போட்டி நிலவுவதாக நம்பப்படுகிறது.

ராஜபக்சக்களின் ஆட்சியின்போது குறைந்தது 14 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் என எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு தெரிவித்திருக்கிறது.

ராஜபக்சவின் கட்சி இத் தாக்குதலைக் கண்டித்திருக்கிறது. ” சில சமூக வலைத்ஹ் தளங்கள் இதை ஒரு அரசியல் முனைப்புள்ள சம்பவம் எனச் சாடுகின்றன. எமது கட்சி ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கும் ஒன்று. இச் சம்பவத்தை நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறோம்” என கட்சியின் பேச்சாளர் தெரிவித்தார்.

ஒப்பீட்டளவில் இத் தேர்தலின் போது மிகக் குறைந்த வன்முறைச் சம்பவங்களே இடம்பெற்றுள்ளன எனவும் இருப்பினும் சில ஊடகங்கள் பக்க சார்பான பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்தன எனவும் தேர்தல் முடிந்தவுடன் அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய கூறியிருந்தார்.

15.99 மில்லியன் வாக்காளர்கள் இத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதிபெற்றவர்கள் ஆவர். 35 வேட்பாளர்கள் ஜனாதிபதி பதவிக்காகப் போட்டியிடுகிறார்கள். கோதபாய ராஜபக்சவும், சஜித் பிரேமதாசவும் முன்னணி வேட்பாளர்களாவர். இருவரிடையேயும் கடும் போட்டி நிலவுவதாகவும் இரண்டாம் சுற்றின் மூலம் வெற்றி பெறுபவர் நிச்சயிக்கப்படும் சூழ்நிலை உள்ளதாகவும் கள நிலைமைகள் தெரிவிக்கின்றன.

Print Friendly, PDF & Email
Related:  மலையக மாணவர்களுக்கு அனைத்துலக மருத்துவ நல அமைப்பு (IMHO USA) தொடர்ந்தும் ஆதரவு