News & AnalysisSri Lanka

கோதாபய ராஜபக்ச – மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விருப்பம்

2024 இல் நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விருப்பம் கொண்டுள்ளதாக கோதாபய ராஜபக்ச அறிவித்துள்ளார்.

நேற்று (19) காலை, சில ஊடகங்களின் தலைவர்களைச் சந்தித்தபோது தனது கொள்கைகளையும், திட்டங்களையும் முழுமையாக நடைமுறைப்படுத்த மீதமிருக்கும் 3 வருடங்கள் போதாது எனவும் மேலும் 5 வருடங்கள் தேவைப்படுமெனவும் ஜனாதிபதி ராஜபக்ச தெரிவித்ததாக அவர்து பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்கா ருவீட் செய்திருக்கிறார்.

” நான் ஆரம்பித்ததை முடித்துவைப்பதற்கு, எனக்கு ஒரு தவணை தந்தால் போதும்” என மார்ச் 2020 இல் கோதாபய கூறியிருந்தார்.

புதிதாக நியமிக்கப்பட்ட நிதியமைச்சரும் ஜநாதிபதியின் சகோதரருமான பசில் ராஜபக்சவே சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் எனப் பரவலாகப் பேசப்பட்டது.