கோதாபய ராஜபக்ச மாலைதீவுக்குத் தப்பியோட்டம் – பதவி விலகல் கடிதம் இன்னும் சமர்ப்பிக்கப்படவில்லை?
பிந்திய செய்தி
ராஜபக்ச பயணம் செய்யும் இராணுவ விமானத்தை இறங்குவதற்கு மாலைதீவு அநுமதிக்காத்தால் அவ் விமானம் இலங்கைக்குக் திரும்பி வருவதாகச் செய்திகள் கிடைத்துள்ளன. விரைவில் முழு விபரம்.
- ரூபவாஹினி நிலையத்தில் பொலிஸ் காவல் அகற்றப்பட்டு இராணுவம் கடமையேற்பு
- அமெரிக்கா நுழைவி விசா மறுப்பு
இலங்கை ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச இன்று பிற்பகல் 3:00 மணியளவில் (இலங்கை நேரம்) இராணுவ விமானமொன்றில் மாலைதீவின் தலைநகருக்குச் சென்றுள்ளதாக அறியபப்டுகிறது. அவர் அமெரிக்காவுக்குச் செல்வதற்கு முயன்றதாகவும் அதற்கு அமெரிக்கா நுழைவு விசாவை வழங்க மறுத்துவிட்டதாகவும் தெரிகிறது.
நேற்று கட்டுநாயக்கா விமான நிலையத்தினூடாக வெளியேற அவர் எடுத்த முயற்சிகளை விமான நிலைய அதிகாரிகளும் பொதுமக்களும் சேர்ந்து தடுத்துவிட்டதாகச் செய்திகள் வெளிவந்திருந்தன. பாதுகாப்பாக வெளியேறும்வரை அவர் தனது பதவி விலகல் கடிதத்தைச் சமர்ப்பிக்கவில்லை எனவும் அதைச் சமர்ப்பித்திருந்தால் ஜனாதிபதிக்குரிய பாதுகாப்புகள் அவருக்கு வழங்கப்படமாட்டாது என்பதால் இறுதிவரை அவர் அதைச் செய்யவில்லை எனவும் தெரிகிறது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே இறுதிவரை அவருக்கு ஆலோசனைகளை வழங்கிப் பாதுகாப்பாக அநுப்பிவைத்ததாகக் கூறப்படுகிறது.
இதே வேளை, பசில் ராஜபக்ச ஏற்கெனவே நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்கா விமான நிலையத்தில் அவரும் பொதுமக்களாலும் அதிகாரிகளாலும் ஆரம்பத்தில் தடுக்கப்பட்டரென்றாலும் பின்னர் அவர் துபாய் மூலம் அமெரிக்கா செல்வதற்கு அனுமதிப்பட்டதாகத் தெரிகிறது.
இதே வேளை, ரூபவாஹினி செய்தி நிறுவனக் கட்டிடத்துக்கு இதுவரை பாதுகாப்பு வழங்கிய பொலிசாரை அகற்றிவிட்டு அங்கு தற்போது இராணுவம் அங்கு நிலைகொண்டுள்ளதாகச் செய்திகள் கிடைத்துள்ளன. இது இராணுவச் சதியொன்றிற்கான ஏற்பாடோவென தலைநகரில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.