கோதாபய ராஜபக்ச ஆகஸ்ட் 20 நாடு திரும்புகிறார்?
சிங்கப்பூரிலிருந்து சில நாட்களின் முன்னர் தாய்லாந்து சென்ற முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ச ஆகஸ்ட் 20 அன்று நாடு திரும்பவுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
ராஜபக்சவின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தர தாய்லாந்து மறுத்தமையால் எதிர்பார்த்தபடி 3 மாத காலம் அங்கு தங்காது உடனடியாக நாடு திரும்ப அவர் உத்தேசித்துள்ளதாகவும் அவரை இலங்கைக்கு கொண்டுவருவதற்காக விசேட விமானம் ஒன்று தயாராக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதே வேளை இதுவரை காலமும் அவரது வெளிநாட்டுப்பயணங்களுக்கான செலவை அரசாங்கமே பொறுப்பேற்றுள்ளதாகச் சந்தேகங்கள் எழுந்துள்ள அவற்றைப் பற்றிய விபரங்களை அறிய வழக்கறிஞர்கள் குழுவொன்று தயார் செய்துவருவதாகவும் கூறப்படுகிறது.