கோதாபய சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்படலாம்? – மனோஹர டி சில்வா

கைது செய்வதற்கான சர்வதேச முயற்சிகளைத் தடுத்து நிறுத்த அரசாங்கம் விரவாகச் செயலாற்ற வேண்டும் – சரத் வீரசேகர

இலங்கையை விட்டுத் தப்பியோடிய கோதாபயவுக்கு அமெரிக்கா விசா அனுமதி மறுத்தமைக்கு காரணம் ஐ.நா. தீர்மானத்துக்கமையை அவரைஇக் கைதுசெய்வதற்கான காரனத்துக்கா இருக்கலாம் என கொழும்பு மத்தி பாராளுமன்ற உறுப்பினர் மனோகரா டி சில்வா சந்தேகம் தெரிவித்துள்ளார். 2014 மார்ச்சில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை 25/1 ஒன்றின் பிரகாரம் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மேற்கொண்ட விசாரணைகளைத் தொடர்ந்து கோதாபய மீது ‘உலகளாவிய அதிகார வரம்பு’ (Universal Jurisdiction) என்ற பரந்துபட்ட கைதுசெய்யும் அதிகாரத்தை ஐ.நா.சபை அறிவித்திருந்தது. இதுவரை காலமும் அவர் நாட்டின் ஜனாதிபதியாக இருந்தமையினால் அவர் கைதுசெய்யப்பட்டாமல் இருக்க அரசியலமைப்புச் சட்டம் வசதி செய்திருந்தது. தற்போது அவர் பதவியை விட்டு விலகிவிட்டபடியால் உலகின் எந்த நாட்டில் வைத்தும் அவர் அந்த நாட்டினால் கைதுசெய்யப்பட வாய்ப்புண்டு.

கடந்த சில நாட்களில் பிரித்தானிய பாராளுமண்றத்தில் கோதாபயவைக் கைதுசெய்யும்படி அழுத்தம் கொடுக்கப்பட்டது. அமெரிக்காவின் விசா மறுப்பு, பிரித்தானியாவின் அழுத்தம் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது கோதாபயவைக் கைதுசெய்ய மேற்குநாடுகள் திட்டமிடுகின்றனவோ எனத் தான் சந்தேகப்படுவதாக டி சில்வா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கவுன்சில் சட்டத்தரணியான டி சில்வா, அரசியலமைப்பு வரைவை உருவாக்கியவர்களில் ஒருவராவார்.

கடந்த வாரம் பிரித்தானிய பாராளுமன்றத்தில் உரையாற்றிய லிபரல் டெமோக்கிரட் கட்சித் தலைவர் சேர் எட்வார்ட் டேவீ, கோதாபய மற்றும் அவர் சகபாடிகள் மீதான சர்வதேச பிடியாணையை அறிவிக்கவேண்டும் எனக் கேட்டிருந்தார். அதே வேளை கோதாபய நாட்டை விட்டு ஓடித் தப்பியிருந்தாலும் அவரிழைத்த குற்றங்களுக்கான பொறுப்புக்களிலிருந்து தப்பியோடிவிட முடியாது எனவும் “மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட ஜனாதிபதியும் அவரது சகபாடிகளும் அக் குற்றங்களுஇக்காகப் பொறுப்பேற்க வைக்கப்படுவார்களா அதே வேளை இது தொடர்பில் அமைச்சர் சர்வதேசங்களோடு அமைச்சர் ஒத்துழைப்பாரா” எனத் தான் அமைச்சர் மில்லிங்கிடம் கேட்பதாகவும் ஸ்கொட்டிஷ் தேசியக் கட்சி பா.உ. அலிசன் ஸிமித்தும் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.

இவ் விடயத்தில் அமெரிக்கா நேரடியாகத் தலையிடாவிட்டாலும் வேறு நாடுகள் மூலமாக கோதாபயவைக் கைதுசெய்ய அமெரிக்கா பின்னணியில் நடவடிக்கை எடுக்கலாமெனத் தான் சந்தேகப்படுவதாகவும் டி சில்வா தெரிவித்துள்ளார். பொதுவாக இப்படியானவர்களைக் கைதுசெய்வதற்கு மேற்கு நாடுகள் தயக்கம் காட்டுவது வழக்கம் ஆனால் தலைவர்களுக்கும், இராணுவ அதிகாரிகளுக்கும் அவை விசாக்களைக் கொடுக்க மறுக்கின்றன” என அவர் மேலும் தெரிவித்துள்ளார். அமெரிக்காவும் அவுஸ்திரேலியாவும் ஃபீல்ட் மார்ஷல் சரத் ஃபொன்சேகா உட்பட, மேஜர் ஜெனெரல் உதய பெரேரா, மேஜர் ஜெனெரல் சகீ கலகே ஆகியவர்களுக்கு விசாக்களை மறுத்தும் ஜெனெரல் ஷவேந்திர சில்வாவை கறுப்புப் பட்டியலிலிட்டும் தமது அதிருப்திகளிக் காட்டியிருக்கின்றன.

கோதாபய தப்பி ஓடுவதற்கோ அல்லது அவரது பயண ஒழுங்குகளைச் செய்வதற்கோ தாம் எந்த வகையிலும் உதவிகளைச் செய்யவில்லை என இந்தியாவும் மறுத்துள்ளது.

இந் நிலையில் ஜெனிவாவின் பிரேரணை தொடர்பாக எப்படி செயற்படுவதென்பது குறித்து இலங்கை தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யவேண்டும். குறிப்பாக நிரூபிக்கப்படாத போர்க்குற்றங்கள் தொடர்பாகவும் அவை தொடர்பாகப் பொய்யான பரப்புரைகளைச் செய்யும் எதிர்த்தரப்பின் நடவடிக்கைகள் தொடர்பாகவும், நவம்பர் 20119 முதல் ஜூலை 09, 2022 வரை இருந்த ஆட்சியதிகாரம் எதையுமே செய்யவில்லை என்பது குறித்து அது வெட்கப்படவேண்டும் என டி சில்வா தெரிவித்துள்ளார்.

போகுமிடமற்றுத் தவித்திருக்கும் முன்னாள் ஜனாதிபதியின் திரிசங்கு நிலையை மேற்கு அரசாங்கங்கள் தமக்குச் சாதகமாகப் பாவிக்கலாமெனவும், இது குறித்து அரசாங்கம் உடனடியாகச் செயற்படவேண்டுமெனவும் முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகராவும் தெரிவித்துள்ளார்.