கோதபாய வெளிநாடு செல்ல நீதிமன்றம் தற்காலிக அனுமதி -

கோதபாய வெளிநாடு செல்ல நீதிமன்றம் தற்காலிக அனுமதி

மருத்துவ சிகிச்சை காரணமாக வெளிநாடு போகலாம்?
பிந்திய செய்தி:
ஜனாதிபதி தேர்தல் குறித்த வர்த்தமானி அறிவித்தல் சடடவிரோதமானதென காலி நகர முதல்வர் மேத்ஸிரி டி சில்வா வினால் நீதிப் பேராணை (writ) ஒன்றை விடுக்கும்படி உச்சநீதிமன்றத்திடம் கோரிக்கை விடப்பட்டுள்ளது. கோத்தபாய ராஜபக்சவின் வழக்கு முடியும்வரை தேர்தலைத் பின்போடுவதற்கான முயற்சியாக இது இருக்கலாம் எனச் சிலர் சமூக வலைத்தளங்களில் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

அக்டோபர் 3, 2019

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு போவதற்கு -9ம் திகதி முதல் 12 ம்திகதி வரை – கொழும்பு நிரந்தர உயர்நீதிமன்றம் அனுமதியளித்திருக்கிறது.

மெடமுலனவில் டி.ஏ.ராஜபக்ச நினைவு மண்டபமும் அருங்காட்சியகமும் கட்டுவதற்காக அரச பணத்தைக் கையாடியதாக சட்டமா அதிபர் தொடுத்திருந்த வழக்கு இன்று விசேட உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் அபயக்கூன், விஜேரட்ன மற்றும் ஜானகி ராஜரட்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

செவ்வாயன்று (01), கோதபாய சார்பில் தோன்றிய வழக்கறிஞர் அலி சப்றி, ராஜபக்சவின் கடவுச் சீட்டைத் திருப்பித் தருமாறு நீதிமன்றத்தைக் கேட்டிருந்தார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராகவிருக்கும் ராஜபக்ச நியமனப் பத்திரம் தாக்கல் செய்யும்போது தனது அடையாளத்தை நிரூபிப்பதற்காக கடவுச் சீட்டுத் தேவை என்று கேட்டிருந்தார்.

அத்தோடு தனது வாடிக்கையாளர் சமீபத்தில் சிங்கப்பூரில் இருதய அறுவைச் சிகிச்சை பெற்றிருந்தார் எனவும் அதன் மீதான மீள் பரிசோதனைக்காக அக்டோபர் 9 முதல் 12 வரை அவர் சிங்கப்பூர் செல்வதற்கு கடவுச் சீட்டு அவசியம் எனவும் அலி சப்றி நீதிமன்றத்தைக் கேட்டிருந்தார்.

இன்று வழக்கு எடுத்துக்கொள்ளப்படும்போது சட்டமா அதிபருக்குப் பதிலாகத் தோன்றிய பிரதி சட்டமா அதிபர் டிலீபா பீரிஸ், கோதபாயவின் கோரிக்கைக்குத் தான் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை எனத் தெரிவித்தார். இதையடுத்து மூவர் கொண்ட நீதிபதிகள் குழு கோதபாய மீது விதிக்கப்பட்டிருந்த பயணத் தடையைத் தற்காலிகமாக நீக்கியதுடன் இதுபற்றி குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்துக்கும் உடனடியாக அறிவிக்கும்படியும் பணித்தனர்.

நாடு திரும்பியதும் கடவுச் சீட்டை நீதிமன்றத்திடம் கையளிக்கவேண்டுமெனவும் நீதிமன்றம் ராஜபக்சவுக்கு உத்தரவிட்டது.

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error
Related:  கோதாவின் ஆட்சி ஆரம்பம்? | எழுத்தாளரைத் தாக்கிய குண்டர்கள்!
error

Enjoy this blog? Please spread the word :)