கோதபாய ராஜபக்ச இன்னும் அமெரிக்க குடியுரிமையைத் துறக்கவில்லை? -

கோதபாய ராஜபக்ச இன்னும் அமெரிக்க குடியுரிமையைத் துறக்கவில்லை?

Spread the love
ஆகஸ்ட் 15, 2019

சிறீலங்கா பொஹுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கோதபாய ராஜபக்ச அறிவிக்கப்பட்டிருந்தாலும் அமெரிக்கக் குடியுரிமையைத் துறக்காததால் இன்னும் அவர் அதற்குரிய தகுதியைப் பெறவில்லை எனக் கூறப்படுகிறது.

சிறீலங்காவின் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம் வெளிநாட்டுக் குடியுரிமையை வைத்திருக்கும் ஒருவர் அதன் உள்ளக தேர்தலில் போட்டியிட முடியாது. இதன் அடிப்படையில் அமெரிக்கக் குடியுரிமையைக் கொண்டிருந்த கோதபாய ராஜபக்ச அமெரிக்க குடியுரிமையைத் துறக்காமல் தேர்தலில் போட்டியிட முடியாது.

அமெரிக்க அரசாங்கத்தினால் வருடா வருடம் வெளியிடப்படும் ‘குடியுரிமையைத் துறந்தவர்களின் பட்டியலில்’ ராஜபக்சவின் பெயர் காணப்படவில்லை. இப் பட்டியல் ஒவ்வொரு காலாண்டும் வெளியிடப்படுகிறது. ஜூன் மாதம் 30ம் திகதி வெளியான பட்டியலில் கோதபாயவின் பெயர் இருக்கவில்லை. இது தென்னிலங்கை அரசியல் வட்டாரங்களில் அவரது வேட்பாளர் தகுதி பற்றிச் சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

அடுத்த பட்டியல் ஆகஸ்ட் 15 வெளியிடப்படும் என்று அமெரிக்க அரசின் மத்திய பதிவுகள் செயலகம் (The Office of the Federal Register of the US) தெரிவித்திருந்தது. ஆனால் அதிலும் அவரது பெயர் காணப்படவில்லை.

இந்த வருடம் மே மாதம் தான் அமெரிக்க குடியுரிமையைத் துறந்துவிட்டதற்கான பத்திரத்தைப் பெற்றுவிட்டேன் எனக் கோதபாய அறிவித்திருந்தார். மே மாதம் 7ம் திகதி அவர் சிறீலங்கா கடவுச் சீட்டைப் பெற்றிருந்தார் என சிறீலங்காவின் குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்திருந்தது.

 

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error
Related:  பெப். 4 இல், இராணுவத்தினருடன் சேர்த்து விடுதலைப் புலி கைதிகளையும் விடுதலை செய்க | ஜனாதிபதியிடம் அஜித் பிரசன்னா வேண்டுகோள்