Sri Lanka

கோதபாயவிற்கே சி.ல.சு.கட்சி ஆதரவளிக்கும்

சுதந்திரக்கட்சியின் ஆதரவில்லாது பொதுஜன பெரமுன 50%+1 வாக்குகளைப் பெற முடியாது – சியம்பலபிட்டியா

செப்டம்பர் 28, 2019

ஜநாதிபதித் தேர்தலில் தனியாகப் போட்டியிடப் போவதில்லை எனவும், தமது ஆதரவைக் ஒஹபாய ராஜபக்சவுக்கே அளிக்கப்போவதாகவும் ஆனால் ஏற்கெனவே எடுத்திருந்த நிலைப்பாட்டின்பட, மலர் மொட்டு சின்னத்தை மாற்றாவிட்டால் சிறீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணையும் நோக்கம் இல்லை எனவும் சிறிலங்கா சுதந்திரக்கட்சி தலைமைப் பீடம் தெரிவித்துள்ளதாக கொழும்பு டெய்லி மிரர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இரண்டு கட்சிகளும் இணைந்து போட்டியிடுவதையே பெரமுன விரும்பினாலும் சுதந்திரக் கட்சியின் அங்கத்தவர்கள் மலர் மொட்டு சின்னந்த்தின் கீழ் இணையத் தயாரில்லை என அறியப்படுகிறது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கீழ் இயங்கும் சிறிலங்கா சுதந்திர பட்டதாரிகள் சங்கம் நேற்றிரவு கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறீசேனவைச் சந்தித்துக் கேட்டுக்கொண்டதற்கிணங்க சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்குத் தமது ஆதரவை வழங்குவதற்கு ஜனாதிபதி இணங்கியிருக்கிறார் எனவும், தற்போதுள்ள நிலையில், கோதபாய ராஜபக்சவே சரியான வேட்பாளர் எனத் தாம் நம்புவதாகவும் பட்டதாரிகள் சங்கத்தின் உப தலைவரும் முன்னாள் அமைச்சருமான றஞ்சித் சியம்பலப்பிட்டிய தெரிவித்துள்ளதாக அறியப்படுகிறது.

தற்போதுள்ள நிலையில் சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கு நான்கு தேர்வுகள் இருந்தன. அவை, தேர்தலில் வேட்ப்பாளரை நிறுத்தாமலும் எவருக்கும் ஆதரவளிக்காமல் நடுநிலையைப் பேணியும் இருப்பது; தனித்துப் போட்டியிடுவது; ஐ.தே.கட்சி அணிக்கு ஆதரவளிப்பது அல்லது சி.ல.பொ.பெ. க்கு ஆதரவளிப்பது.

“தமது ஆதரவாலர்களை வாக்களிக்க வேண்டாமென்று கூறியதன் மூலம் 1988 இல் சிறிலங்கா சுதந்திரக் கட்சி பாரிய தவறொன்றைச் செய்துவிட்டது. நடுநிலையாக இருப்பது கட்சிக்குப் பெரும் பின்னடைவைக் கொடுக்கும் என்பதைப் பின்னர் நாம் புரிந்து கொண்டோம். அதே தவறை மீண்டும் இழைக்க நாம் தயாரில்லை. எங்கள் சிறந்த வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவாக இருந்தாலும் அவருக்குத் தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை என்பதுவும் போட்டியிட்டாலும் கட்சியால் வெற்றியீட்ட முடியாது என்பதும் எங்களுக்குத் தெரியும். சிறிலங்கா சுதந்திரக் கட்சி தனித்துப் போட்டியிட்டால் அது முற்போக்குவாதிகளின் வாக்குகளைப் பிரிக்கும் இச் சூழ்நிலையில் அது ஐ.தே.கட்சிக்கே ஆதரவாக அமையும். நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் நடைபெற்ற வெளிநாடுகளுடன் செய்யப்பட்ட கேடு தரும் ஒப்பந்தங்கள், கேடு விளைவிக்கும் வெளிவிவகாரக் கொள்கைகள், பொண்ட் மோசடி போன்ற நல்லாட்சி அரசாங்கத்துடனான கசப்பான ஆனுபவங்கள் போதும். கோதபாய நாட்டுப்பற்றுள்ள, முற்போக்கு சிந்தனைக்ளைப் பிரதிபலிப்பவர். எனவே அவரை ஆதரிக்கவே நாம் முடிவெடுத்துள்ளோம்” என சியம்பலப்பிட்டியா கூறியதாக அப் பத்திரிகை மேலும் தெரிவிக்கிறது.

கொள்கை ரீதியாகவோ, கோட்பாட்டு ரீதியாகவோ, ஆளும் மார்க்க ரீதியாகவோ, சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும், சிறிலங்கா பொதிஜன பெரமுனவிற்கும் எதுவித வித்தியாசமுமில்லை. எனவே திரு ராஜபக்சவை ஆதரிப்பதில் எங்களுக்கொரு பிரச்சினையும் இல்லை. ஆனால் இரண்டு தரப்பினரும் எங்கள் முன்னால் உள்ள சவால்களைப் புரிந்துகொள்வது அவசியமானது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவின்றி ராஜபக்சவுனால் 50%+1 வாக்குகளைப் பெற்று அறுதி வெற்றியைப் பற முடியாது என சியம்பலப்பிட்டியா கூறினார்.

2018 உள்ளூராட்சித் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி 50% வாக்குகளைப் பெற முடியவில்லை. நான்கு மாவட்டங்களில் மட்டுமே 50%த்துக்கு மேல் பெற முடிந்தது. முதலாவது தடவையிலேயே ராஜபக்ச 50%+ வாக்குகளை எடுத்து வெற்றி பெற வேண்டுமானால், சி.ல.சு.கட்சியின் ஆதரவு முக்கியம்.

முற்போக்காளர்களின் ஆதரவு ஏன் இன்னுமொரு முற்போக்காளரான ஜே.வி.பி. வேட்பாளர் அனுரகுமார திசநாயக்காவுக்கு கொடுக்கப்படவில்லை எனக் கேட்ட போது, தற்போதுள்ள நிலையில் பெரும்பாலான சி.ல.சு.கட்சியாளரின் ஆதரவு ராஜபகசவுக்குத்தான் இருக்கிறது என சியம்பலப்ப்இட்டியா கூறினார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் படித்த, விவேகமான அங்கமான சிறிலங்கா பட்டதாரிகள் சங்கத்தின் விருப்பம் சிறிலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளரை ஆதரிப்பதே என அச் சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பூதிக இட்டமல்கொட கூறினார்.

(செய்தி மூலம்: கொழும்பு டெய்லி மிரர்)