கோதபாயவின் அமெரிக்கக் குடியுரிமை விவகாரம் – தேவையானால் நிரூபிப்போம் | நாமல்

சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான கோதபாய ராஜபக்சவின் அமெரிக்க குடியுரிமைத் துறப்பு சம்பந்தமான பத்திரம் ‘தேவையான் போது’ முன்வைக்கப்படும் என அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

‘அமெரிக்க நாட்டின் குடியுரிமையைத் துறந்தவர்களினதும் நாட்டை விட்டு வெளியேற விண்ணப்பித்தவர்களினதும் பெயர்களையும் கொண்ட அமெரிக்க அரசின் காலாண்டுப் பிரசுரத்தில் கோதபாயவின் பெயர் காணப்படவில்லை’ என பொருளாதார சீர் திருத்தம் மற்றும் பொது விநியோகத்திற்கான மாநில அமைச்சர் ஆக்டர் ஹர்ஷா டி சில்வா அனுப்பிய ‘கீச்சல்’ செய்திக்குப் பதிலளித்த நாமல் ராஜபக்ச மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

https://www.federalregister.gov/documents/2019/08/15/2019-17498/quarterly-publication-of-individuals-who-have-chosen-to-expatriate-as-required-by-section-6039g

“சிறீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளரைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். பத்திரம் (குடியுரிமை துறப்பு நிரூபணம்) தான் உங்கள் பிரச்சினையானால் தேவையெனில் அதை நாங்கள் முன்வைப்போம். அடுத்த சில மாதங்களுக்கு ஆட்சியைக் கவனித்து நாட்டைப் பரிதாபமான நிலையிலிருந்து மீட்ட்டெடுங்கள். அத்தோடு நீங்கள் யாரை வேட்பாளராக முன்னிறுத்தப் போகிறீர்கள் என்பதைப்பற்றியும் கவலை கொள்ளுங்கள்”

-நாமல் ராஜபக்ச

“ஜூன் 30இல் வெளிவந்த அமெரிக்க அரசின் காலாண்டு அறிக்கையில் கோதபாய ராஜபக்சவின் பெயர் இல்லை என்பது எனக்கும் இப்போது தான் தெரிகிறது. இது பற்றி மேலும் தகவல்களை எதிர்பார்க்கிறோம். சிறீலங்காவை முன்னேற்ற இரு தரப்பினரும் என்னென்ன திட்டங்களை வைத்திருக்கின்றார்கள் என்பதை அறிய மக்கள் விரும்புகிறார்கள் என்பதை நானும் அறிவேன். எவர் எப்படிப் பெரியவராக இருப்பினும் நாட்டின் சட்டத்தைவிட எவரும் பெரிதாகிவிட முடியாது. அவ்வளவுதான். அவர் (கோதா) உரிய பத்திரங்களை வைத்திருப்பாரானால் எனக்குப் பிரச்சினை இல்லை.” என நாமல் மேலும் தெரிவித்தார்.