Spread the love

கொழும்பு ஜூலை 13, 2020: இலங்கை கத்தோலிக்க சபை, கொழும்பு மறை மாவட்டத்தின் துணை பிஷப்பாக அருட் தந்தை ரஞ்சித் பிள்ளைநாயகம் அவர்களை போப்பாண்டவர் நியமித்துள்ளதாக வத்திக்கன் செய்தி தெரிவித்துள்ளது.

53 வயதையுடைய மறை மாவட்ட அருட் தந்தை பிள்ளைநாயகம், கார்டினல் மல்கம் ரஞ்சித்தின் தலைமையின் கீழ் பணிபுரியவிருக்கும் மூன்றாவது துணை பிஷப்பாகுவார். இதற்கு முன்னர் 2011 இல் அருட்தந்தை மக்ஸ்வெல் சில்வாவும், அடுத்ததாக 2018 இல் அருட்தந்தை ஜே.டி. அந்தனி ஜயக்கொடியும் துணை பிஷப்புகளாக நியமிக்கப்பட்டிருந்தார்கள். கொழும்பு செயின்ட் ஜோசெஃப் கல்லூரியின் துணை றெக்டராக இருக்கும் அருட் தந்தை பிள்ளைநாயகம், தமிழ் இறையியலாளர் பிரிவில் பணிப்பாளராகவும் உள்ளார்.



செப்டம்பர் 23, 1966 அன்று யாழ்ப்பானத்தில் பிறந்த அருட்தந்தை பிள்ளைநாயகம், தனது ஆரம்ப, உயர் கல்விகளைகொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் பெற்றிருந்தார். பின்னர் யாழ்ப்பாணம் செயின்ட் ஃபிரான்சிஸ் சேவியர் செமினரியில் தத்துவத்தையும், கண்டி தேசிய செமினரியில் இறையிலையும் கற்றார். அத்தோடு யாழ் பல்கலைக்கழகத்தில் கணிதவியலுக்கான இளமானிப் படிப்பயும், பிரித்தானிய மிடில்செக்ஸ் பலகலைக்கழகத்தில் கல்விக்கான உயர்மானிப் படிப்பையும், யாழ் பல்கலைக்கழகத்தில் தத்துவத்தில் உயர்மானிப் படிப்பையும் முடித்திருக்கிறார்.

செப்டம்பர் 16, 2000 அன்று கொழும்பு செயின்ட் லூசியா தேவாலயத்தில் பாதிரியாராகப் பிரகடனப்படுத்தப்பட்டார்.

Print Friendly, PDF & Email