கொழும்பு | சனநெரிசலில் 3 பேர் மரணம் – மாளிகாவத்தை பள்ளிவாசல் தெருவில் சம்பவம்

கொழும்பு | சனநெரிசலில் 3 பேர் மரணம் – மாளிகாவத்தை பள்ளிவாசல் தெருவில் சம்பவம்

Spread the love

தனியார் வீடொன்றில் பணம் வழங்கப்பட்டதன் காரணமாக மக்கள் திரண்டனர்

கொழும்பு மே 21, 2020: மாளிகாவத்தையில், பள்ளிவாசல் தெருவிலுள்ள வீடொன்றில் பணம் வழங்கப்படுகிறதென்பதைக் கேட்டு அங்கு பலர் திரண்டு முண்டியடித்ததன் காரணமாக ஏற்பட்ட நெரிசலில் 3 பெண்கள் மரணமானதாகவும், மேலும் 8 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிய வருகிறது.

தனியார் ஒருவரால் காசு வழங்கப்படுகிறது எனக் கேள்விப்பட்ட அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 500 பேர் அவ் வீட்டின்முன் கூடியதாகவும் அப்போது ஏற்பட்ட சன நெரிசலில் இச் சம்பவம் இடம்பெற்றதாகவும் காவற்துறை தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். காயப்பட்டவர்கள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Print Friendly, PDF & Email