வட அமெரிக்காவின் அதி வேகமாக வளர்ந்துவரும் தொழில்நுட்ப மாநாடு மே20 முதல் 23 வரை ரொறோண்டோவில் எக்சிபிசன் பிளேசில் நடைபெறுகிறது. ‘தி கொலிசன் கொன்பெரென்ஸ்’ (the Collision conference ) என அழைக்கப்படும் இம் மாநாடு 120க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து சுமார் 25,000 ர் வரை இம் மாநாட்டில் பங்குபற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Shopify, Samsung, Snapchat போன்ற முதன்மையான நிறுவனங்கள் உள்ளிட்ட பல நிறுவனங்களிலுமிருந்து சுமார் 700 பேச்சாளர்கள் இதில் பேசுவார்கள். அத்தோடு சுமார் 1,100 startup நிறுவனங்கள் தங்கள் முயற்சிகளை இங்கு காட்சிப்படுத்துவார்கள். அத்தோடு ‘ஆர்ட்டிபிசல் இன்ரெலிஜென்ஸ்’ (artificial intelligence) எனப்படும் செயற்கை விவேகம் தொடர்பாக ஆராய்ச்சியை மேற்கொண்டுவரும் விஞ்ஞானிகள் முதல் ஹாலிவூட்டின் முன்னணி நட்சத்திரங்கள் வரை பேச்சாளர்களாகக் கலந்து கொள்வார்கள்.

கனடிய பிரதமர் ஜஸ்டின் ட் ரூடோ, ஒன்ராறியோ முதலமைச்சர் ட்க் போர்ட், ரொறோண்டோ நகரபிதா ஜோன் ரோறி மற்றும் மத்திய சூழல் விவகார அமைச்சர் கதறீன் மக்கென்னா உள்ளிட்ட பல அரசியல்வாதிகளும் இம்மாநாட்டில் கலந்து உரையாற்றுவார்கள் என மாநாட்டின் ஆரம்பகர்த்தா படி கொஸ்குறோவ் கூறினார்.

இனி வருங் காலங்களில் ரொறோண்டோ தான் தொழில்நுட்ப ஆராய்ச்சி விவகாரங்களில் முன்னணி வகிக்கப் போகிறது என்பதை உண்ர்ந்துகொண்டபடியால் தான் இம் மாநாட்டைத் தாம் இங்கு நடத்துவதற்கு முன் வந்தோம் என்கிறார் அமைப்பாளர் படி கொஸ்குரோவ்.