Spread the love

ஜனவரி 22, 2020

கொறோனா வைரஸ் | இறந்த பலருக்குக் காய்ச்சல் (சுரம்) இருக்கவில்லை? 1
விமான நிலையத்தில் காய்ச்சலுடன் (சுரம்) வருபவர்களைத் தனிமைப்படுத்துவதற்கு வெப்பமானிகளைப் பாவிக்கிறார்கள்

சமீபத்தில் சீனாவின் வூஹான் நகரில் ஆரம்பித்ததாகக் கூறப்படும் கொறோனா வைரஸ் தொற்று நோய்க்குள்ளாகி இதுவரை 24 பேர் மரணமாகியும், 800 பேருக்கு மேல் நோயறிகுறிகளைக் கொண்டுமுள்ளார்கள்.

உலக சுகாதார நிறுவனம் இத் தொற்றை அவசரகால விடயமாக அறிவிப்பதா இல்லையா எனத் தீர்மானிப்பதற்கெனெ நேற்று ஒரு சந்திப்பை நிகழ்த்தியிருந்தது. அதன் முடிவாக, இந் நோயின் பரவல் இன்னும் ஆபத்தான நிலையை எட்டவில்லை எனவும், நோயைக் கட்டுபடுத்த சீனா மிகவும் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதால் இது குறித்து கொஞ்சம் பொறுத்துத் தீமானிப்பதே நால்லது எனவும் உலக சுகாதார நிறுவனம் முடிவெடுத்திருந்தது. இவ் விடயத்தில் அச் சந்திப்பை நிகழ்த்தியவர்கள் 50 / 50 வீதமாகப் பிரிந்த நிலையில் இம் முடிவை எடுத்துள்ளார்கள்.

அதே வேளை இறந்தவர்களில் பலருக்கு காய்ச்சல் (சுரம்) இருக்கவில்லை எனவும் ஆனால் இருமல், மூச்சுத் திணறல் போன்ற சுவாசப்பை சம்பந்தப்பட்ட அறிகுறிகள் இருந்தனவெனவும் தற்போது தெரியவந்துள்ளது. ஆனால் இந் நோயைக் கட்டுப்படுத்தும் முதல் நடவடிக்கையாக பல விமான நிலையங்களில் பயணிகளின் நெற்றிகளில் வெப்பமானிகளைப் (எலெட்றோணிக்) பிடிப்பதன் மூலம் அவர்களுக்கு காய்ச்சல் இருக்கிறதா என்பதை மட்டுமே அவதானிக்கிறார்கள். எனவே இது சரியான முறையா எனபது பற்றிய அச்சம் இப்பொழுது பலரையும் பீடித்து வருகிறது.

இதுவரை இறந்த 24 பேர்களில் 7 பேருக்கு காய்ச்சல் இல்லாமல். சுவாசிக்கச் சிரமப்படுதல், நெஞ்சு இறுக்கம், இருமல் ஆகிய அறிகுறிகள் இருந்தனவெனக் கூறப்படுகிறது.

“காய்ச்சல் அறிகுறியைக் காட்டாது இவ் வைரஸ் பரவுமானால் மனிதர்களின் கருவிகளுக்கு அகப்படாமல் அது உலகம் முழுவதும் பரவிவிடுவதற்குச் சாத்தியங்களூண்டு” என வாஷிங்டன் டி.சி. யிலுள்ள நோய்க் கட்டுப்பாடு மற்றும் பொருளாதாரக் கொள்கை வகுப்பு மையத்தைச் சேர்ந்த ரமணன் லக்ஸ்மிநாராயன் தெரிவித்திருக்கிறார்.

சீனர்களின் மிகப்பெரிய கொண்டாட்டமான புது வருடம் இவ்வாரம் நிகழவிருப்பதால் பல மில்லியன் சீனர்கள் உலகெங்கும் பயணங்களை மேற்கொள்வார்13கள். இருப்பினும் சீனா பல நகரங்களில் முற்றாகப் பயணத்தடைகளை நடைமுறைப்படுத்தியுள்ளது.

Print Friendly, PDF & Email
Related:  'குடில்' | மனவளம் நலிவுற்றோருக்கான புனர்வாழ்வு இல்லத்தின் அடிக்கல்நாட்டு வைபவம் தெல்லிப்பழையில் நடைபெற்றது