Spread the love
2008 முதலீட்டுச் சந்தையில் குழப்பநிலை மீண்டும் வரக்கூடும்?

பெப்ரவரி 27, 2020


கொறோனவைரஸின் தாக்கம் தற்போது பங்குச் சந்தைகளையும் தொற்றிவிட்டது. வட அமெரிக்கச் சந்தைகள் பெரும்பாலும் எல்லாமே இன்று (வியாழன்) 10 %த்துக்கு மேல் வீழ்ச்சியடைந்துள்ளன. பல முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை விற்கத் தொடங்கியுள்ளார்கள்.

டிசம்பர் 2018 இற்குப் பிறகு வருகின்ற குறிப்பிடத்தக்க திருத்தம் (correction) இதுவென்று சந்தை ஆய்வாளர் தெரிவிக்கின்றனர். இதே வேகத்தில் வீழ்ச்சி தொடருமானால் 2008 நிதிக்குழப்பநிலையைப் போலொன்று திரும்பவும் நிகழலாம் என அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

பொதுவாகச் சந்தைகள் அரசாங்க நிதி அறிக்கை, பொருளாதார அறிக்கை, இறக்குமதித் தீர்வை போந்ற வெளியீடுகளை அண்டி ஏற்ற இறக்கம் காண்பது வழமை. இந்தத் தடவை அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு மையம் கொறோனவைரஸின் கட்டுப்பாடற்ற பரவல் தொடர்பாக நேற்று விட்ட அறிக்கையுடன் தொடர்புபடுத்தி அமெரிக்க பொருளாதார, நிதி முதலீட்டாளர்கள் தமது நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளதாகத் தெரிகிறது.



கொறோனாவைரஸ் தொடர்பாக, அட்லாண்டாவிலுள்ள அமெரிக்க நோய்க்கட்டுப்பாட்டு மையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்கா இனியும் அசட்டையீனமாக இருக்க முடியாது என அறிவித்ததும், சான் பிரான்சிஸ்கோ நகரம் அவசரகால நிலையைப் பிரகடனப் படுத்தியதும், ஏதோ பெரும் ஆபத்தொன்று கருக்கொள்கிறது என்ற அச்சத்தை முதலீட்டாளர்களின் மனங்களில் ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக இன்று சந்தைகள் பெரும்பாலும் ‘பங்குகளை விற்கும் ஏவலில்’ (sell order) பிசியாகி விட்டன.

ஐரோப்பாவில் Stoxx Europe 600 இன்று 10% த்துக்கு மேல் பெறுமதியை இழந்துவிட்டது. எண்ணை விலையும் விச்சியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றது.

அமெரிக்காவின் நிதி மையமான வால் ஸ்ட்றீட் தனது எதிர்பார்ப்பை அறிவித்திருக்கிறது. அதன்படி S&P 500 இன்று மட்டும் 7% வீழ்ச்சியடையலாம் எனக் கூறுகிறது. கடந்த 12 வருட காலமாக வளர்ச்சியடைந்து வந்த சந்தை (bull market) இனித் திசை திரும்பி வீழ்ச்சிச் சந்தையாக (bear market) மாறுமெனப் பல முதலீட்டு ஆலோசகர்களும் எதிர்பார்க்கிறார்கள்.

Print Friendly, PDF & Email
Related:  வியட்நாம் | உயிரிழப்பு எதுவுமில்லாது முடித்துவைக்கப்பட்ட கோவிட் போர்